- Sunday
- October 18th, 2026
வலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் அரசு முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில்...
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை இன்றைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில்...
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு புதிய மிரட்டல் வந்துள்ளது. அந்தப் படம் வெளியாகும் பிப்ரவரி 5-ம் தேதி, சென்னையில் 8 அரங்குகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளனர் சிலர். இதுகுறித்து சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் மேலாளருக்கு கடிதம் ஒன்றும் வந்துள்ளது. அஜீத், திருவான்மியூர் என்ற பெயரிலிருந்து வந்த கடிதத்தை தியேட்டரின் மேலாளர் ஹரிஹரன் வாங்கிப்...
ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு நேற்று (28-1-2014) பிறந்த நாள். இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார். பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட கலைஞர் ஸ்ருதிஹாஸன். மிக இளம் வயதிலேயே, தன் தந்தையின் உன்னைப்...
இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தமிழர் என்றால் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைக்கான அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டார். ஆனால், சில நாட்களாகவே இவர் படத்தின் பாடல்கள் பெரிய அளவிற்கு ஒன்றும் ஹிட் ஆகவில்லை. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தின் பாடல்கள் மிகவும் ரசிகர்களை சோதித்தது. இந்நிலையில் இவரின் ஆஸ்தான...
தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பழிவாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். தனது தங்காலை - கால்ட்டன் இல்லத்தில் இருந்தவாறு தன் மீதான குற்றச் சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒரு போதும் இல்லாதவாறு தனக்கும் தனது...
சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூயநீர் வழங்குவதற்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ். பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின் இணைத் தலைவர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார...
யாழ்.பல்கலைக் கழகத்திற்கு வெளிவாரியாக தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து நீதியரசாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் சிராணி பண்டாரநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர்...
கனடாவில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சிறப்பு கண்ணாடி மூலம் முதன்முறையாக பார்த்து வியந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் கேத்தி பீட்ஸ் (29). இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா...
வடமாகாண செயலாளராக அந்தோணிப்பிள்ளை பத்திநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நேற்று (27) நியமிக்கப்பட்டார். மொனராகலை மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளராக பத்திநாதன் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவரை, சட்டத்தரணிகள் பூச்செண்டுகொடுத்து வரவேற்றனர். தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் இடம்பெற்ற நிலையில் சிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துளளார். இதேவேளை...
உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் கழிவு எண்ணெய் நீரில் மிதப் பது வீட்டு உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. உரும்பிராய் சந்திக்கு அண்மையில் மேற்குப் பக்கமாக 100 மீற்றர் தொலைவி லுள்ள வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்தே நீரில் கழிவு எண்ணெய் மிதப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த பாலவண்ணன் என்பவரது வீட்டுக்கிணற்றிலிருந்தே இவ்வாறு கழிவு...
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், நாடு திரும்புவது குறித்த பேச்சு இருநாட்டு பிரிதிநிதிகளுக்குமிடையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வந்த சமயம் இது குறித்து பேசப்பட்டதென்றும் அவர் தெரிவித்தார். அகதிகளுக்கான ஐ.நா. மன்றம், ஐரோப்பிய...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்கஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு, இன்னும் 1,425 இலட்சம் ரூபாய் வழங்கவேண்டியுள்ளது என உள்ளக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை...
வீட்டுத்திட்டம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக கோரி உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட J/208 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டுள்ளனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றதுடன் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என்று கோரி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அளுத்கடை, உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பிரதம நீதியரசருக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை இராணுவமும் அதனுடன் சேர்ந்த இராணுவ அனுசரணைச் சக்திகளும் நெடுந்தீவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் யாழ்ப்பாணத்தின் பிற பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நெடுந்தீவு மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு,...
வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜனின் தந்தை இராமநாதன், அவரது உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டார். அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றச்சாட்டிலேயே...
நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் கடற்படையினர் முகாம் அமைப்பதற்காக வீதியை ஆக்கிரமித்துள்ளதாக நெடுந்தீவு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெடுந்தீவு பிரதேச மக்களை சந்திப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர்களான இ.ஆனோல்ட், பா.கஜதீபன், அனந்தி சசிதரன், அ.பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம் கே.சயந்தன்...
Loading posts...
All posts loaded
No more posts
