5,000 குடைகள் கைப்பற்றல்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டதாக பொலிஸார் கூறினர். கல்கிஸை, கலாபுர பகுதியில் மூடப்பட்டிருந்த கட்டிடமொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த குடைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாணம் வருகிறார் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்!

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வருகிறார். அவர் இந்தப் பயணத்தின்போது யாழ்ப்பாணத்துக்கும் சென்று தற்போதுள்ள நிலை குறித்து ஆராய்வார் என்று கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் இவரது வருகை அமைந்துள்ளது. இலங்கைவரும் அமைச்சர் இங்கு, அரச தரப்பை சந்தித்து பல்வேறு...
Ad Widget

நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. தெல்லிப்பழை, நாவற்குழி, சண்டிலிப்பாய், மயிலிட்டி, வரணி, கெருடாவில், கோண்டாவில், மானிப்பாய் ஆகிய 8 பிரதேசங்களில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த தற்காலிக ஊழியர்களுக்கு இந்த...

வீதியோரத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வல்லிக்குறிஞ்சி முராலி பிள்ளையார் கோவிலுக்கு அருகில், தலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம், செவ்வாய்க்கிழமை (27) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலை வடக்கு போதனாமடம் பகுதியை சேர்ந்த சரவணமுத்து சந்திரமோகன் (வயது 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் உழவு இயந்திரத்தின் சில்லின் அடையாளம் காணப்படுவதுடன், சிறிது தூரத்தில்...

கே.பி. விவகாரம்: பெப். 5இல் அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தாக்கல் செய்யப்பட்ட...

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிழக்க காரணம் இணைய தாக்குதலா?

உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பல லட்சம்பேர் இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தங்களின் பேஸ் புக் கணக்குகளை தொடர்புகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் இந்த அளவுக்கு செயற்படாத மோசமானதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன்...

இராணுவப் புரட்சி எதையும் திட்டமிடவில்லை – மஹிந்த

இலங்கையில் ஒருபோதும் இராணுவ அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற தான் முயற்சிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகக் கூறியுள்ளார் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள தன்னிலை...

சர்ச்சையை கிளப்புமா எஸ்.ஜே.சூர்யாவின் இசை?

மூன்று வருடங்களாக இப்போது வரும் அப்போது வரும் என்று போக்குக் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவின் இசை வரும் 30 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்புடன் இசைக்கு சூர்யா இசையமைக்கவும் செய்துள்ளார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளருக்கும், வளர்ந்துவிட்ட முதிய இசையமைப்பாளருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதல்தான் படத்தின் கதை. ரஹ்மான்...

பெப். 1 முதல் பஸ் கட்டண குறைப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து, பஸ்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்படும் என்று பொது போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார தெரிவித்துள்ளார். இந்த கட்டணங்கள் 8-10 சதவீதத்துக்கு குறைக்கப்படும் என்றும் ஆகக்குறைந்த கட்டணம் 1 ரூபாவால் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விலைக்குறைப்பு அறிவிப்பால் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு!

மா, சீனி, பால்மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் தனது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனூடாக அத்தியாவசிய பொருட்களுக்கு விலைக்குறைப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வர்த்தகர்கள் இவ்வகையான உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதை இடை...

இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான வழிமுறைகளை இலகுபடுத்துக! – கூட்டமைப்பு

இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளவர்கள், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடர்பாடுகளைக் களைந்து அதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண...

தாயக வளங்கள் சூறையாடப்படுவதை அனுமதிக்க முடியாது – மாவை

எமது பிரதேச வளங்கள் சட்டவிரோதமாக சூறையாடப்பட்டு வருவதை ஒருபோதும் எங்களால் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்.வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் தடை அனுமதியையும் மீறி மகேஸ்வரி நிதியத்தினர் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட முனைந்த போது, இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டுக்கு அனுமதி

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொதுமக்களுடன் திங்கட்கிழமை (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு சென்ற விஜயகலா, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன்...

மின்சக்தி அமைச்சின் உயர்மட்டக் குழு எண்ணெய் கசிவு தொடர்பில் ஆராய்வு

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வருகை தந்த உயர்மட்டக் குழுவினர், சுன்னாகம் மின்சார நிலையத்துக்கு திங்கட்கிழமை (26) விஜயம் செய்து எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு...

சேறுபூசுவதற்கு குடும்பத்தை இழுக்க வேண்டாம் – நாமல்

எனக்கும் என் தந்தைக்கும் எந்தளவுக்கு சேறு பூசவேண்டுமோ அந்தளவுக்கு சேறு பூசவும் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எங்களுடைய அம்மாவையோ, குடும்பத்தையோ அரசியல் சேறு பூசுவதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். என்னுடைய தாய், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கத்தை களவெடுக்கவில்லை. முன்னாள் பிரதிபொலிஸ் மா...

வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்குத் தீர்வு! மன்னார் ஆயரிடம் ஜனாதிபதி உறுதி!!

இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு தம்மைச் சந்தித்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி உறுதிமொழியை மன்னார்...

உயர்தரத்துக்கு கணித பாட சித்தி கட்டாயம் – கல்வி அமைச்சு

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு...

யாழ்.போதனா வைத்தியசாலையின் குறைகளை கேட்டறிந்த ராஜித சேனாரட்ன

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் 127 பேரையும் சுகாதார உதவியாளர்களாக இணைத்துக் கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன நடவடிக்கை எடுத்துள்ளார். போதனா வைத்தியசாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிவரும் 127 பேரையும் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி அவர்களை சுகாதார உதவியாளர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

இலங்கை வருகிறார் மோடி

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வருவார் என இந்தியத் தூதரகத்தின் தகவல் ஊடகப்பிரிவுக்குப் பொறுப்பான முதற் செயலாளர் ஈஷா ஸ்ரீநிவட்சவா தெரிவித்துள்ளார். திகதிகளை இறுதிசெய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர்...

வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து

வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப்...
Loading posts...

All posts loaded

No more posts