Ad Widget

விலைக்குறைப்பு அறிவிப்பால் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு!

மா, சீனி, பால்மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் தனது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனூடாக அத்தியாவசிய பொருட்களுக்கு விலைக்குறைப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வர்த்தகர்கள் இவ்வகையான உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதை இடை நிறுத்தியுள்ளனர்.

இப்போதுள்ள விலையில் பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்தால், விலைக்குறைப்பின்போது தமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று கருதியே கடை உரிமையாளர்கள் இவ்வாறு இடைநிறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இருக்கும் பொருட்களை மட்டும் விற்பனைசெய்யும் நடவடிக்கையிலேயே கடை உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக கோதுமை மா, அரிசி வகைகள், பருப்பு, பால்மா வகைகள் உள்ளிட்ட பொருட்களை கடைகளில் கொள்வனவு செய்யமுடியவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கிராமப்புறங்களில் இவ்வகையான பொருட்களுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts