- Saturday
- July 25th, 2026
ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோது, கடவையைக் கடந்தவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளித்தார். யாழ். கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பான வீதிக்கடவை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மூடியிருந்த போது பாலாவி பகுதியை சேர்ந்த நபர் கடவையை கடந்து...
கழிவு எண்ணெய் கிணறுகளில் பாதிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேச மக்கள் நேற்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள 'நொதேர்ன் பவர்' அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை நிலத்தின் கீழ் செலுத்தியமையால் சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய்...
காரைநகர் பிரதேசசபை தலைவர் ஆணைமுகன் தாக்கியதில் பெண் செயலாளரின் சின்னி விரல் முறிந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், செயலாளரான காசிநாதன் கேதீஸ்வரி (வயது 59) என்பவரே காயமடைந்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆணைமுகனின் நண்பரான வீரசிங்கம் என்பவருக்கு கல்...
சீனாவின் உதவியுடன் கொழும்பில் உருவாக்கப்படும் துறைமுக நகரம் குறித்து இலங்கையின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக 'ரொய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்று சுமார் ஒரு பில்லியன் ரூபா செலவில் அமைத்து வரும் இந்தத் துறைமுக நகரம் அமைக்கப்படுகின்றது. இதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இந்தத் துறைமுக நகரத்தினால்...
வடக்கு ஆளுநர் நியமனத்தை வரவேற்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தற்போது நியமனம் பெற்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை நியாயப்படுத்தி வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டுவந்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளவை வருமாறு:- வடக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரியான ஜி.ஏ.சந்திரசிறியை மாற்றுமாறு நாம் முன்னைய அரசிடம் பலதடவைகள்...
வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்துக்கு வருபவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபார சிறிசேன தலைமையில் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே இந்தக் கட்டுப்பபாடு நீக்கப்பட்டது. வடக்குக்கு வரும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் நடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மனவடுவ தெரிவித்தார். அமைந்த புதிய அரசாங்கத்தில் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு உடன்பாடு ஏற்பட்டிருந்தது. எனினும் அது தோல்வியில் முடிந்து விட்டது. ஆனாலும் இது குறித்து...
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் முன்னரே...
வேலணை மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையை உடைத்த விசமிகள் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார். வேலணை மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கடந்த புதன்கிழமை (14) இரவு உடைக்கப்பட்டது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை அமைப்பாளரும், வேலணை...
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் உரிய அழைப்புக்கள் கொடுக்கப்படாமையால் விசாரணைக்கு செல்லவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் குறிப்பிட்டார். கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களை கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், காரைநகர் பிரதேச...
ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள், பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பீங்கான்கள், சிவப்பு நிற சால்வையுடன் கூடிய டி-சேர்ட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து மீட்ட பொலிஸார், அவற்றுக்கு சீல் வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, தங்கொட்டுவையில் அமைந்துள்ள போசிலன்...
எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக டப்ளியு டி ஜே செனவிரத்னவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, நாடுகடந்து வாழ்கின்ற ஊடகவியலாளர்கள் நாடுதிரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் மூலம் ஊடக சுதந்திரத்திற்கான வழிகள் பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாடுதிரும்பத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான சுனந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். ஆனால், இலங்கையில்...
87 -வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் அவர் ஆஸ்கர் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்த, ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம், கோச்சடையான் ஆகிய படங்கள் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலுக்கு தகுதியான படங்களின் பட்டியலில் இருந்தன. ஆனால் அவை பரிந்துரைப்...
பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருப்பது கொள்கைக்கு மாறானது. அவ்வாறான தலையீடுகள் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக்குழு கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஒற்றுமை நிலவவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பது தொடாபாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 50 வருட காலமாக மிகுந்த அர்பணிப்புடன் கட்சி தலைமை உட்பட பல பதவிகளை வகித்தவன் என்ற வகையிலும், கட்சியை வளர்த்தெடுத்தவன்...
மகேஸ்வரி நிதியம் மேற்கொண்டு வரும் மணல் அகழ்வுக்கு பொலிஸாரால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மக்களால் நாகர்கோயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்தநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த மகேஸ்வரி நிதியத்தைச் சேர்ந்த சிலர் 'இது தமக்குச் சொந்தமான இடம். அனுமதிப்பத்திரத்துடனேயே மணல் அகழ்கின்றோம்....
நான் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவன். அந்தக் கட்சிக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவதாகவுள்ளார். எனவே அந்தக் கட்சிக்குள் இருந்து அவருடன் செயற்பட தாயாராகவுள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே...
Loading posts...
All posts loaded
No more posts
