- Monday
- May 4th, 2026
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தினால் நுணாவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளுக்கான மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் எழுவோம் சுனாமிப்பேரலையின் கோர நிகழ்வுகள் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள சிற்பாலய கலைக் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுனாமி சிற்பத்தின் முன்பாக வழிபாடு இடம்பெற்று சுனாமிப் பேரலையில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டு மறைந்த சிற்பக் கலைஞன் ஏ.வி.ஆனந்தனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் தமிழ் ஊடகங்களில் ஆசிரியர்களுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி...
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ இரட்டை வேடம் போடுகிறார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால் மாறாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர்...
கிளிநொச்சி மாவட்ட வெளிக்கள பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு ஜம்தாயிரம் ரூபாவிற்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரின் கவனத்திற்கு குறித்த உத்தியோகத்தர்களினால் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அரச வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கும் விரைவாக மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வகையில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்...
தெல்லிப்பளை கிழக்கு J/228 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கொக்குவில் மற்றும் நந்தாவில் பகுதி மக்களும் நேற்றயதினம் (25) காலை ஒன்றுகூடி தங்களது அடிப்படை வசதிகள் தொடர்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தெல்லிப்பளை கிழக்கு, வண்ணாமாதரை, நாமகல் வீதி விளானை உட்பட அப்பகுதி சார்ந்த கிராமங்களினது மக்கள் தங்களுக்கான போக்குவரத்து பாதைகள் புதிய...
ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பில் யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் தபால் மூலமான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (23) முதல் 250 வாக்குச் சாவடிகளில் 200 தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது....
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் புதன்கிழமை (24) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில்...
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களிடம் புதன்கிழமை (24) விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் மேலும் ஐந்து பேரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸாரின் அழைப்பின் பேரில், வடமாகாண...
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டதாரிகள் சங்கம், அரசுடன் இணைந்து செயற்படும். அதில் மாற்றமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் சங்கத் தலைவரும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன், புதன்கிழமை (24) தெரிவித்தார். யாழ். விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே...
சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார்....
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான...
கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4 பேர் மரணமடைந்துள்ள அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நாட்டின் பல பகுதிகள்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்களை கட்டாயப்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்கும் குறித்த வாழ்த்துக் கடிதத்தில் கையொப்பம் இடுமாறு துணைவேந்தரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரச உத்தியோகத்தவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவது தொடர்பில் யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு அனைத்து துறைகளுக்கும் தேவையாக பாதீடுகள் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது....
ரஜினியின் லிங்கா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், உடனே அடுத்த படத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்திற்கான கதையை அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ரெடி செய்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இன்னும் சூப்பர் ஸ்டாரின் வாய்ஸிற்காக தான் ஐஸ்வர்யா வெயிட்டிங். இது குறித்து அதிகாரப்பூர்வ...
கத்தி பட கதை திருடப்பட்டதாக வழக்கு: நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
கத்தி பட கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேர் அடுத்த மாதம் 23-ந்தேதி நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை எதிர்த்து தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை...
தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக வடமாகாணத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இப்போது பெய்து வரும் மழைகாரணமாக குளங்கள் நிரம்பியுள்ளதோடு, தாழ்நிலங்களில் குடியிருந்தவர்களிற் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இவர்களில் மிகப்பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்கள் என்பதோடு...
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மஹிந்த அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "பொதுபலசேனாவின் முஸ்லிம் விரோத எதிர்ப்பு நடவடிக்கைகளால், நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என நாம்...
"இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களால் இன்று கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் போதனையுடன் மானிடர்களின் விடுதலைக் கான வழியைக் காட்டியது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்." - இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நத்தார்...
Loading posts...
All posts loaded
No more posts
