- Wednesday
- May 6th, 2026
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் ஹசன் அலியும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா...
இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு அரச தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவை இலங்கையின் வடபகுதி மீனவர்கள் வரவேற்றிருக்கின்றார்கள். இதுபற்றி கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் அல்பட் ஜஸ்டின் சொய்சா, இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்துவதை இரு நாட்டு அரசாங்கங்களும்...
துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. [caption id="attachment_40563" align="aligncenter" width="625"] கொல்லப்பட்ட பெண்ணின் படத்தோடு பலர் போராட்டங்களில் பங்கேற்றனர் [/caption] கொல்லப்பட்ட...
இராக்கின் மேற்கு நகரான அல்-பாக்தாதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 45 பேரை எரித்துக் கொலை செய்துள்ளனர் என இராக்கிய பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார், என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள் , என்பது சரியாக தெரியவில்லை.ஆனாலும் அவர்களில் சிலர், பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் என நம்புவதாக இராக்கிய பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த...
கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3...
யாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர் செவ்வாய்க்கிழமை (17) மதியம் இடிந்து விழுந்ததில் ரமேஸ் பிரியங்கா என்ற இரண்டு வயதான குழந்தையொன்று இறந்துள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது., மேலதிக விசாரணைகளை...
யாழ்.மாநகரசபையால் அகற்றப்படும் கழிவுகளை கல்லுட்டாய் வெளியில் கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மாநகர எல்லைக்குள் கழிவகற்றல் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ்.மாநகரசபை தனது எல்லைக்குள் சேகரிக்கும் திண்மக் கழிவுகளை இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை...
இந்தியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிறுநீரக மாற்று மோசடிகள் இடம்பெறுகின்றன என்றும் இதற்கான தொடர்பாடல் சாதனமாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இந்திய நாளிதழ்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தியாவின் ஹைதராபத் நகரில் நேற்று 4 நோயாளிகளும், ஒரு வைத்தியரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், 2 மடிக் கணினிகள், 6 கைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில்...
யாழ்.பண்டத்தரிப்பு சந்தியில் செவ்வாய்க்கிழமை (17) துவிச்சக்கரவண்டி மீது தனியார் பஸ் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் பலியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதகல், வில்வளை பகுதியை சேர்ந்த ரி.பகீரதன் (வயது 28) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இளவாலை மற்றும் யாழ்ப்பாணப்...
யாழ்.மாநகர சபை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாய் மற்றும் காக்கைதீவு பகுதியில் கொட்டப்படுவதை நிரந்தரமாக நிறுத்தக்கோரி நவாலி, ஆனைக்கோட்டை பகுதி மக்கள் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. தொடர்ந்து கல்லுண்டாய் வீதியின் இரு மருங்கிலும் பகுதி பகுதிகளாக...
சிவராத்திரி தினத்துக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு புதன்கிழமை (18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலாசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான பதில் நாளாக எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கலாசாலை செயற்படும். கற்பித்தல் பயிற்சிக்காக பாடஅலகுகளை பெறவேண்டிய ஆசிரிய மாணவர்கள்...
ஆவரங்கால் மந்திரிமனை ஜே-277 பகுதியில் அமைந்துள்ள வீடொன்று திங்கட்கிழமை (16) மாலை தீக்கிரையாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தனர். வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றாக எரிந்தமையால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் சாமி அறையில் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்த தீ, வீடு முழுவதுமாக பரவியதாக விசாரணைகளின் மூலம்...
இளவாலை கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகளை ஞாயிற்றுக்கிழமை (15) தீயிட்டு எரித்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேந்தான்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பேரை திங்கட்கிழமை (16) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். எரிந்த படகுகளுக்கு அருகில் கிடந்த பெனியன் மற்றும் லைற்றர் ஆகியவற்றை கொண்டு மோப்பநாயின் உதவியுடன் 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக...
கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின்...
இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிப்பதை தாமதப்படும் முடிவை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுத்தால் அதன் காரணமாக குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி செல்ல கூடும். அதற்கு இலங்கை இடமளிக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாது காணப்படுகின்றன என வடக்கு முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இணைந்து உள்ளூராட்சி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதன்போது வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன் தனது வரவேற்புரையிலும் முதல்வர்...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ.16 கோடி கொடுத்து டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது. அதே போல் தினேஷ் கார்த்திக்கை ரூ.10.5 கோடி கொடுத்து ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது. 23 அயல்நாட்டு வீரர்கள் உட்பட 67 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். மொத்தமாக செலவிடப்பட்ட தொகை ரூ.87.6 கோடி....
"இரத்தம் சிந்தி, சத்தியாக்கிரகம் இருந்து இழந்து - அழிந்து போன ஒரு சமூகத்திற்காக உருவானது தான் இந்த மாகாண சபை. எனவே, கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை வகிக்க எமக்கு உரிமை இல்லையா?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். "கிழக்கு மாகாணத்திற்கு...
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்ரெம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில்...
Loading posts...
All posts loaded
No more posts
