- Wednesday
- May 6th, 2026
இளவாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சகோதரர்களின் இரண்டு படகுகள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தீயிட்டு எரிக்கப்பட்டதாக இளவாலை பொலிஸார் திங்கட்கிழமை (16) தெரிவித்தனர். சகோதரர்களான பாக்கியநாதன் றேகன் மற்றும் பாக்கியநாதன் கமில்ரன் ஆகியோருடைய இரண்டு படகுகள், இரண்டு படகு இயந்திரங்கள் 40 வலைகள் என்பன தீயால் எரிந்துள்ளன. இரண்டு படகுகள் எரிவதாக பொதுமக்கள் வழங்கிய...
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரின் கைப்பையில் இருந்த நகைகள் திருட்டுப்போன சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறினர். பெண்ணொருவர் தனது சிறிய கைப்பையை தனதருகில் வைத்துவிட்டு, அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த தருணம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் அதனை திருடிச் சென்றுள்ளார். அலைபேசியில் உரையாடிய பின்னர், தனது கைப்பையை தேடியபோதே...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு மட்டத்தில் நீலப்படையணி எனும் பெயரில் கடந்த காலங்களில் செயற்பட்ட படையணி, இனிமேல் செயற்படாது என்றும் அப்படையணி ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் சு.க.வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இனிமேலும் நீலப்படையணி போன்ற படையணிகள் செயற்பட மாட்டாது. எங்களிடம் ஸ்ரீ லங்கா...
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு திருயாத்திரை மேற்கொண்டிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் சமூக சேவை நிதியத்துக்காக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.7 மில்லியன் ரூபாய் நிதியை, இலங்கைக்கே மீண்டும் பரிசளிக்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார். அந்த நிதியில், இலங்கையிலுள்ள ஏழைகளுக்கான உதவிகளைச் செய்து, அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு கொழும்பு...
ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். தனக்கு அடுத்ததாக வந்த தி.மு.க. வேட்பாளர் என். ஆனந்தைவிட 96,516 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த் 55,045 வாக்குகளையும் பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எம். சுப்ரமணியம் 5,015 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாச்சாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு நான்குநாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் புதுடில்லியில் நேற்று திங்கட்கிழமை மதியம் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்தச் சந்திப்பின் இறுதியில் முக்கிய ஒப்பந்தங்கள்...
மிகவும் நுட்பமான கணினித் தாக்குதல் ஒன்றில், 30 நாடுகளில் சுமார் 100 வங்கிகளில் இருந்து பல நூறு மிலியன் டாலர்கள் பணம் திருடப்பட்டிருக்கிறது என்று ரஷ்ய கணினிப் பாதுகாப்பு நிறுவனமான “கேஸ்பர்ஸ்கி லேப்” கூறுகிறது. அவர்கள் கையாண்ட முறை என்ன ? யுக்ரெயின் தலைநகர் கீவ் பகுதியில், தானியங்கிப் பணம் தரும் இயந்திரம் ஒன்று, தாறுமாறான...
ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தை அவரது முதல் படம் பீட்சாவை தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரே தயாரிக்கிறார். இறைவி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு நடிகர் இவர்களுடன் இணைந்துகொள்ளவிருக்கிறார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை....
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்போது இந்த கூட்டணியில் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’...
கீழுள்ள படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார். குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர். திஸாநாயக்க முதியன்செலாகே சுஜித் நிலந்த என்ற...
பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திரமோடியை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாரியார், இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவலோக்தேஸ்வர போதிசத்துவர் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) பிற்பகல் திரை நீக்கம் செய்து வைத்தார். கி.மு 08ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போதிசத்துவர் சிலை அனுராதபுர வேரகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையான இதன் பாதங்கள் லலிதாசன...
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை யாழ்.பிரதான நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய, வடக்குமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்குமாகாண ஆளுநர், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர்கள்,...
கோண்டாவில் பகுதியில் வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வீதியில் நின்றுகொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சண்டையொன்றில் ஈடுபடும் நோக்குடன் வீதியில் நின்றிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கோண்டாவில் பகுதியில் சனிக்கிழமை (14) மாலையில்...
பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த...
உலக கிண்ண போட்டியின் 5வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கெய்ல்...
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை குறித்த தீர்மானம் பற்றி, வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கருத்து வௌியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இலங்கை அரசின் இனப் படுகொலை தொடர்பாக அண்மையில் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஜனாதிபதி சிறிசேனவிற்கோ அல்லது அவரின் அரசிற்கோ எதிரானதல்ல எனவும் முன்னைய அரசுகளையே, குறிப்பாக...
வன்னி, மற்றும் தீவக வலய பாடசாலைகளில் பணியாற்றி தமது பணிக்காலம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த சம்பவமொன்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ் நகரின் கஸ் தூரியார் வீதியிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளருக்கு கடந்த சில தினங்களாக இடம் பெற்று வருவதாக அக்கடையின் உரிமையாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
