- Sunday
- May 10th, 2026
புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 19ம் திகதி வௌ்ளிக்கிமையில் இருந்து ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. நேற்றய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்கும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இலங்கையின் புங்குடு தீவைச் சேர்ந்த மாணவி வித்யாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் காவல்துறையினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விசாரித்து வருவது குறித்து சுரேஸ் பிரமச்சந்திரன் கேள்வியெழுப்பியிருக்கிறார். சாதாரண வழக்குகளுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியிருக்கிறார். வித்யா கொலை தொடர்பான விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை, பயங்கரவாதத்...
யாழ்ப்பாணத்தின் சில முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மது பாவனையின் அளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக குற்றச்செயல்களில் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இந்த நிலையில் யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரை அச்சுறுத்தியமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமத்தில் புகையிரத வீதி, மற்றும் ஏ9 வீதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குடியிருப்பு வீதிகள் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து...
புனர்வாழ்வு அளிக்கப்பட முன்னாள் போராளிகள், தடுப்பிலுள்ள போராளிகளின் குடும்பங்கள், மாவீரர்களின் குடும்பங்கள் ஆகியோருக்கு உதவி வழங்கும் திட்டத்துக்காக தரவு சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வடமாகாண மீன்பிடி, வர்த்தக வாணிப மற்றும் கிராமி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், புதன்கிழமை (17) தெரிவித்தார். சேகரிக்கப்பட்ட தரவுகளை முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்...
பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மேற்படி மாணவி, பாடசாலை முடிந்து தனிமையில் வந்துகொண்டிருந்த போது, மேற்படி சாரதியும் மோட்டார்...
சிறுநீரக நோய் அதிகளவில் பரவும் வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களின் தரங்களை பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்டுள்ளது. குறித்த குடிநீர் போத்தல்களின் தரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை முன்வைத்த முறைப்பாடுகளுக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தநிலையில், குறித்த மாகாணங்களின் விற்பனை செய்யப்படும்...
யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவு கூரும் தினம் இன்று புதன்கிழமை பலாலி இராணுவத் தளத்தில் ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பலாலி படைத்தளதில் அமைந்துள்ள படையினரின் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் பளிஹக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர்கள், இந்தியத் துணைத்தூதர்...
சாவகச்சேரிப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட முதியவரை வாகனம் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாகவகச்சேரி ஏ9 வீதியில் வீதியைக் கடக்கமுற்பட்ட முதியவரை தனியார் சாரதி பயிற்சி நிறுவனத்தின் வாகனம் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சரசாலை வடக்கைச் சேர்ந்த ஏ.நல்லதம்பி...
சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமூகவிரோதக் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான...
மத்திய தபால் பரிமாற்றத்தில் பெருமளவிலான பதிவு தபால்கள் குவிந்து கிடப்பதனால் பதிவுத் தபால் விநியோக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்ற பதிவு தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த இவ்...
வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான, பெருங்குற்றம் மற்றும் சிறுகுற்றம் தொடர்பான மேலதிக வதிவிடப்பயிற்சி நெறி காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பயிற்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (16) முதல் நடைபெற்று வருவதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நடைபெற்றுவருகின்றமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ்...
பொதுத்தேர்தலின் பின்னர் நிச்சயமாக எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்டாயமாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தற்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் பெற்றோல் விற்பனையின் மூலம் 30 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது....
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வெறுமனே படுகொலையாகவோ, வன்புணர்வு நிகழ்வாகவோ எடுக்க முடியாது. வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் இருந்த கோலம், இது வெறும் வன்புணர்வு, படுகொலை என்பதைக் காட்டி நிற்கவில்லை. எனவே, இவ்வழக்கில் உண்மை நிலை என்னவென்று கண்டறியப்பட வேண்டும். அதற்கு சந்தேக நபர்கள் உரிய முறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட...
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் அம்பாள்குளத்தைச் சேர்ந்த மரியதாஸ் உசாராணி (வயது 36 ) என்பவராவார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண் மனநலம் குன்றியவராவார். தனது சகோதரியுடனேயே வசித்து வருகின்றார். நேற்றயதினம் சகோதரி கடைக்குச்...
வறுத்தலைவிளான் பகுதிக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் மூவர் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு குறிப்பிட்ட இருவரையும் கைது செய்த சுன்னாகம் பொலிஸார் அவர்களைதெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட இடம் தெல்லிப்பழை பொலிஸ்...
இலங்கையையும் இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புகின்றன என இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.இதன்போதே மேற்கண்ட விடயத்தை நிதின்கட்காரி கூறினார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஏதாவது நன்மை விளையலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தை நோக்குவதால், எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து நீதி, நியாயம் வேண்டி அனைத்துத் தரப்பினரும் மனிதநேயத்துடன் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும்' - என்று அனைத்து இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் அமைப்பு, அறிக்கையொன்றினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது விடுதலை...
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். வெவ்வேறு திசையில் பயணித்தால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியாது எனவும் அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துவருவதால்,...
ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்ப அதிலிருந்த ஆள் கடத்தல்காரர்களுக்கு 5 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டதை இந்தோனேசியா நிரூபித்துள்ளதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த செய்திக்கு ஆதாரமாக ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரகள் வழங்கினர் எனக் கூறப்படும் அமெரிக்க...
Loading posts...
All posts loaded
No more posts
