- Monday
- May 11th, 2026
நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் விதத்தில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தின் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றமையும், அதன் தாக்கம் அதிகரித்து இருப்பதனாலுமே 'ஆணையாளருக்குக் கூறுங்கள்' என்ற முகப்புத்தகப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகளை இலகுவாகவும் விரைவாகவும்...
ஜனாதிபதியின் போதையற்ற தேசம் என்ற சிந்தனைக்கமைய வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அமைச்சானாது விசேட செயற்திட்டம் ஒன்றை பாடசாலை மாணவர்களிடத்தில் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விசேட போதைப்பொருள் விழிப்புனர்வு நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. வடமாகாண புனர்வாழ்வு இணைப்பு காரியாலயத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...
நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகத்துக்கு அருகில் சென்று ஆச்சரியகரமான பல சமிக்ஞைகளை அனுப்பி வருகிறது. தற்போது, புளூட்டோவில் 11,000 அடி உயரமுடைய மலைத்தொடர்கள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது. 4.56 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரிய குடும்பத்தில் புளூட்டோ 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக கருதப்படுகிறது. நாசாவின் விண்கலம் தற்போது புளூட்டோவின் மிகப்பெரிய...
இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த கரிசனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான சாதகமான சில...
தேர்தல் காலத்தில் அபேட்சகர்களும் ஊடக நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று விளக்கமளித்துள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு வீடுவீடாகச் சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என பொலிஸார் ஊடகங்களில்...
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கான இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வருமாறு, அருந்தவபாலன் கந்தையா- 01 , ஆனந்தராஜ் நடராஜா-02, ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்-03, ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்-04, ஈஸ்வரபாதம் சரவணபவன்-05,...
மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக்-லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் செலவு செய்துள்ளார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு...
பண்ணாகம் அழகரட்ணம் சிவராஜா கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ முன்வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நிறைவு பெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம்...
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, உயிரிழந்துள்ள வாக்காளர்களின் விவரங்கள் கிராம சேவையாளர் ஊடாக தேர்தல்கள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்கள் திரட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலின்போது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளது....
வடமாகாணத்தில் வதியும் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களின் தரவுகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்களின் மருத்துவ விபரங்கள் அடங்கிய விசேட அடையாள அட்டைகளை வழங்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து முடிந்த யுத்தத்தினால்...
தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரச்சி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை பணியிலிருந்து இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் பணிப்புரைக்கு அமைய புதன்கிழமை (15) நடைமுறைக்கு வரும் வகையில்...
சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளை வீடியோ செய்து மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யும் புதிய முறையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் வழங்குதல், ஊர்வலம் நடத்துதல் அடங்கலான சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ செய்து அறிவிக்குமாறு பொதுமக்களை கோருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...
மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு...
உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக் கூட என்னால் பதிலளிக்க முடியாது என நீதிமன்றிற்கு நேரடியாக தெரிவித்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. கடந்த 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான...
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 31 சந்தேகநபர்கள், நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பாடசாலை மாணவர்...
திடீர் வௌிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (16) நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் தெரியவருகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் ஆரம்பமானது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் போதைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார். வடக்கில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமானது. அக்கூட்டத்துக்கு வருகைதந்தபோது அங்கு குழுமியிந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது...
Loading posts...
All posts loaded
No more posts
