யாழில் வங்கி வேலை வாய்ப்புக்காக வெயிலில் தவம் கிடக்கும் பட்டதாரிகள்

யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கை முழுவதும் வேலை இல்லாத இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறுகிறது பொலிஸ் குற்றப் பிரிவின் அறிக்கை ஒன்று. படித்துப் பட்டம் பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை உரிய முறையில் பெற்றுக் கொடுக்க பதவியில் உள்ள...

SLFP வெற்றியீட்டினால் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை: தேர்தலில் நடுநிலை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுத் தலைவர்கள் பொதுவாக விசேட உரைகளை ஆற்றும் போது அவற்றை...
Ad Widget

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும்

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணரும் தற்போதைய யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவருமாகிய முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031ம் ஆண்டில் 10.3 வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் குறிப்பிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜுலை...

தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் அல்­லது அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சட்­டத்தை மீறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், பொது­மக்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க முடியும் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இது குறித்த முறைப்­பா­டு­களை தொலை­பேசி அல்­லது மின்­னஞ்சல் மூலம் அறி­விக்க முடியும் என, பொலிஸ் தலை­மை­ய­கத்தால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. வேட்­பு­மனு வழங்­கிய தினத்தில் இருந்து தேர்தல்...

உடுவிலில் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.தேர்தல் மாவட்­டத்­திற்­கான முத­லா­வது பிர­சாரக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் எதிர்­வரும் 25ஆம் திகதி உடு­விலில் நடை­பெ­ற­வுள்­ளது. இது தொடர்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மான மாவை. சேனா­தி­ராஜா தெரி­விக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்தல் செயற்­பா­டு­களை விரை­வாக ஆரம்­பிக்­க­வுள்­ளது. இரண்டு வார...

ரணிலால் வடக்கில் பாதுகாப்பற்ற நிலைமையாம்!

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தற்போது வடக்கில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை மீண்டும் பிரதமராக்கினால் 2009ஆம் ஆண்டு வென்றெடுக்கப்பட்ட சமாதானம் இல்லாதொழிக்கப்படும். மேற்குலக நாடுகளின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பற்ற...

வடக்கின் கூட்டுறவாளர்களுக்கு மான்செஸ்டர் கூட்டுறவுக் கல்லூரியின் பயிற்சி வகுப்புகள் -வடக்கின் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்தார்

வடக்கு மாகாண சிக்கனக்கடன் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் கூட்டுறவுக் கல்லூரியினால் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (14.07.2015) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்துள்ளார். வடக்கு கூட்டுறவுத்துறையின் அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது....

யாழ்ப்பாணத்து அரச குடும்பத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்புகள்

இராஜ அணிகலத்தின் மறுவடிவமைப்பு குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு. யாழ்ப்பாணத்து அரச குடும்பத்தின் இராஜ அணிகலமானது 24 ஜூன் 2015 இன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இராஜ அணிகலமானது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இவ் இராஜ அணிகலமானது 2005 ஆம் ஆண்டு மறுபடியும் மீளமைப்பு செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இராஜ அணிகலமானது அதன்...

பேருந்துகளில் வேட்பாளர்களின் போஸ்டர்கள் ; சாரதி , நடத்துநர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும்

தேர்தல் வேட்பாளர்களது போஸ்டர்களை அரச பேருந்தில் ஒட்டுவது தேர்தல் சட்டத்திற்கு முரணானது எனவே எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதி, நடத்துநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார். இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லருக்கும் இடையில் யாழ்.பிரதான...

தற்காலிக கொட்டில் தீக்கிரை

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பளை, வீமன்காமம் பகுதியில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த கொட்டிலொன்று, இனந்தெரியாதோரால் திங்கட்கிழமை இரவு (13) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் பாவனைக்கென வலி. வடக்கு பிரதேச சபையால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (14) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதென காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்....

அருணோதயா கட்டடம் மீது மரம் முறிந்து வீழ்ந்து பாரிய சேதம்

அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கல்வி கற்கும் கட்டடத்தின் மீது திங்கட்கிழமை (13) இரவு, மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் கட்டிடம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பிட்ட கட்டடத்தில் இரவு மரம் முறிந்து வீழ்ந்தமையால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கட்டிடத்தின் மீதே வாகை மரத்தின் கிளையொன்று முறிந்து...

பகீரதி தற்கொலை செய்யவில்லை!!,பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளியினை கைது செய்ய வேண்டும் – அனந்தி

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான ஞானச்சந்திரன் பகீரதியின் (வயது 26) மரணம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணையை மேற்கொண்டு, அது கொலையா அல்லது தற்கொலையா என்று கண்டுபிடிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார். அச்சுவேலியைச் சேர்ந்த மேற்படி பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்...

நாவற்குழி – தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது விஷமிகள் தாக்குதல்!

நாவற்குழி - தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிலையத்தில் ஊழியர்கள் எவரும் இல்லாத பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் கண்ணாடிகள் மற்றும் மலசலகூடக் கதவுகள் என்பன உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்தப் பகுதியில் மதுபானப் போத்தல்கள்...

பொதுத் தேர்தலுக்காக 6151 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!

225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவு செய்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6,151 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3,653 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்கள் சார்பாக 2,498 வேட்பாளர்களும்...

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் குருநாத் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நீதிபதி லோதா இந்த அதிரடி...

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு இன்று விசாரணை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கின் விசாரணையை, இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு இன்று புதன்கிழமையன்று ​தொடங்குகிறது. ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த...

மஹிந்த தோல்வியடைவார்: ஜனாதிபதியின் விஷேட உரை

மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை எனக் கூறிய ஜனாதிபதி, ஜனவரி 8ம் திகதி...

ரயில் முன் பாய்ந்து மூவர் தற்கொலை

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு பெண் மற்றும் 01 வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் இவர்கள் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்...

காணாமல்போன கிளிநொச்சி சிறுமி; அலைபேசி பதிவுகள் ஆராய்வு

கிளிநொச்சியில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி காணாமற்போன உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமி தொடர்பான விசாரணையை மேற்வதற்காக சந்தேகப்படும்படியான அலைபேசி இலக்கங்களின் தொடர்புகளை அலைபேசி நிறுவனத்தின் ஊடாக ஆராய்வதற்கு, கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று திங்கட்கிழமை (13) அனுமதி வழங்கினார். சிறுமி கடத்தப்பட்டு பணத்துக்காக...

பஸ் மோதி 5 மாடுகள் பலி: 3 மாடுகள் காயம் : சாரதி கைது

பஸ் மோதியதில் 5 மாடுகள் பலியாகியுள்ளதுடன் 3 மாடுகள் படுகாயமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (13) மாலை யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி சந்தியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே, பாதையை கடக்க முயன்ற மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார்...
Loading posts...

All posts loaded

No more posts