Ad Widget

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் குருநாத் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நீதிபதி லோதா இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குருநாத் மெய்யப்பன் பல நிலைகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தெரிவித்துள்ளார்.

எனவே ஐபிஎல் சூதாட்ட வழக்கில் அவர் ஒரு குற்றவாளி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ராஜ்குந்த்ரா ஐந்து வருடங்களுக்கு கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளிலும், பிசிசிஐயுடன் வாழ்நாள் முழுவதும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts