- Wednesday
- May 13th, 2026
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக, விமான நிலைய சேவையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி, மத்தல விமான நிலையத்தை...
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்தொடர்பாக சர்வதேசவிசாரணை தேவை எனக்கூறி கையெழுத்துப் போராட்டம் நேற்றயதினம் புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இதனை கூட்டமைப்பின் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்திஆனந்தன் கையொப்பமிட்டு ஆரம்பித்துவைத்தார். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா, முத்தையாமண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கு...
இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அவசியம் இல்லையெனவும், அதற்காக நேரம் ஒதுக்குவது வீணானது எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்பில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடர்பில் முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா கருத்துத் தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில்...
வடமாகாண சபையில் உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகளை நிர்ணயித்து விட்டு, அந்த விதிகளை மீறுவது எவ்வகையில் நியாயமாகும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் கேள்வி எழுப்பினார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்வின் போதே அஸ்மின் இந்தக் கேள்வியை எழுப்பினார். 'ஒரு அமர்வில் 15 கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது எனவும்,...
புலனாய்வாளர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தி வீடுகளுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கும் நவடிக்கையில் ஈடுபடுவோரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொக்குவிலில் செவ்வாய்க்கிழமை சில வீடுகளுக்கு சென்ற கொச்சைத் தமிழ் பேசும் மூவர் தாம் சி.ஐ.டியினர் என்றும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரைத் தாம் கைது செய்துள்ளனர் என்றும், அவர்கள் தொடர்பான விவரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளனர். சிலர் அவர்கள் சி.ஐ.டியினர்தான்...
இனி ஒரு படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்கள், 200 நாட்கள் என இழுக்கப் போவதில்லை. அதிகபட்சம் நாற்பது நாட்களில் முடிக்கப் போகிறேன், என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் படங்கள் முன்பெல்லாம் நூறுக்கும் அதிகமான நாட்களுக்கு படப்பிடிப்பு நடப்பது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய படமான பாபநாசம் வெறும் 40 நாட்களில் எடுக்கப்பட்டு, நல்ல...
பெண்ணொருவரைக் கொலை செய்த வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட இருவரும் நிரபராதிகள் என யாழ்.மேல் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை (01) விடுதலை செய்தது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் தவீந்திரராஸ் கலைச்செல்வி என்பவரை கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரன் தவீந்திரராஸ்...
நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில் அதில் சில சுவாரசியமான மறக்கு முடியாத சம்பவங்களும் இடம்பெற்றன. அவற்றில் சில... முதலாவது ஒழுங்குப் பிரச்சினை 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வின் போதே முதலாவது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பப்பட்டது. பிவித்துரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில், உரையாற்றிக் கொண்டிருந்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினர்....
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். இருப்பினும், இந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு தொகையால் அதிகரிக்கப்படவுள்ளது என்பதைக் குறிப்பிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் 50 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்த அரசு சமர்ப்பித்த...
"புதிய அரசின் ஆட்சியில் நாட்டில் ஜனநயாகம், சமத்துவம், நீதி என்பன நிலைநாட்டப்படவேண்டும். இந்த இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை சபாநாயகருக்கு வழங்கும்'' என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தலைமையில் கூடியது. இதையடுத்து...
தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா...
இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா புஜராவின் சதத்தால் 312 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி...
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம்...
ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட 43ஆவது சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி நேற்றுமுன்தினம் சீனாவுக்கு பயணமானது. சீனா சென்ற 19வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ். ஹென்றிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்ட்டுள்ளதோடு கூட்டமைப்பின் கொறடாவாக த. சித்தார்த்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழுக்களின் செயலாளராக சிறிதரனும் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனுக்கு வழங்கப்படவேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரின், இரத்த மாதிரிகளை தனியார் இராசாயண பகுப்பாய்வு நிறுவனதிற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 14ம் திகதி புங்குடுதீவு...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் வந்த 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாயக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து...
யாழில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலமைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்க யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் யாழ்...
8வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த பாராளுமன்றில் ஈபிடிபி கட்சி எம்பியான சந்திரகுமாருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம்...
இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை...
Loading posts...
All posts loaded
No more posts
