Ad Widget

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் இன்று இலங்கை விஜயம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இன்று (02) இலங்கை வரவுள்ளார். நாளைவரை (03) அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.

1972 ஆம் ஆண்டு வில்லியம் பியர்ஸ் ரோஜஸின் விஜயத்திற்குப் பின்னர் அமெரிக்க இராச்சியத்தின் இராஜாங்கச் செயலாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.சுனாமியின் பின்னர் 2005ஆம் ஆண்டில் இலங்கைக்கு அமெரிக்கச் செயலாளராகிய கொலின் பவல் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

இவ்விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் – இலங்கை ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர- ஆகியோரை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அழைப்பின் பேரில் விசேட விருந்தினர் உரையொன்றையும் கெரி ஆற்றவுள்ளார்., கொழும்பில் வேறுபலநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts