Ad Widget

இலங்கை, இந்திய மீனவர்களில் 102 பேருக்கு விடுதலை

இருநாட்டு கடல் எல்லைகளையும் மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் இந்திய மீனவர்களில் 102 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த...

இந்திய வீட்டுத்திட்ட இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ளும் இராணுவம்

இந்திய நிதி உதவியில் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் இறுதிக் கட்டப் பணிகள், இராணுவத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை சனிக்கிழமை (14), யாழ்ப்பாணத்துக்கு வந்து மூன்று நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்வுகளின் ஒன்றாக, இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடொன்றையும் இந்திய...
Ad Widget

வடக்கு, கிழக்கை பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் த.தே.கூ. க்கு இல்லை

வடக்கையும் கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழன் தமிழனாக தன்மானத்துடன் சுயநிர்ணய ஆட்சியில் வாழ்வதே தமது நோக்கமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். சர்வதேச மகளிர்தின நிகழ்வு, மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் புதன்கிழமை...

கிழக்கு மாகாண ஆட்சியில் மீண்டும் குழப்பம்

இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் ஆளும் தரப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே ஆளும் தரப்புக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் தமது ஆதரவை விலக்கிக் கொண்டு எதிர்கட்சியாக இயங்க முடிவு செய்துள்ளனர். குறித்த 10 பேரும் முன்னாள் அமைச்சர்...

ஏ.ஆர்.ரகுமானின் ஜெய் ஹோ டிரைலர் (காணொளி)

ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஆவணப்படம் ’ஜெய் ஹோ’. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது. இதில் ஏ.ஆர் ரகுமான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது பேட்டிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், ஏ.ஆர்.ரகுமானிடம் இணைந்து பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோரின் பேட்டிகளும், பல்வேறு...

சிவ கார்த்திகேயனுக்கு அஜீத் அறிவுரை

சிவ கார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜீத் அவருக்கு அளித்த அறிவுரை குறித்து கூறியுள்ளார். விழா ஒன்றில் அஜீத்தும், சிவ கார்த்திகேயனும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, நீங்க நல்லா பண்ணிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயனை பாராட்டியிருக்கிறார் அஜீத். அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிவ கார்த்திகேயன், கடும் முயற்சி பண்ணிட்டிருக்கேன் சார் என்றிருக்கிறார். உடனே அஜீத், அதெல்லாம் பண்ணாதீங்க....

சிம்புவின் வாலு படத்திற்கு யு சான்றிதழ்

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனைகளால் சிறிது காலம் படப்பிடிப்பு முடிவடையாமல் நின்றது. படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வந்ததாகவும், தயாரிப்பாளரிடம் சிறு பிரச்சனை...

நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்த​டைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரால் இந்திய பிரதமர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.

எண்ணெய் மாசைக் கண்டறிய ரூ.20 இலட்சம் மதிப்பில் நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்தது

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளதா எனச் சோதித்து அறியக்கூடியரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்துள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று புதன்கிழமை (11.03.2015) கையளித்துள்ளார். வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக...

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களை லண்டனில் சந்தித்தார் ஜனாதிபதி

யாழ் இந்துக் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். லண்டனில் உள்ள பழைய மாணவர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கு பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டது. பிரித்தானியாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி பிரித்தானியாவின் பல அரசியல் உயரதிகாரிகளை சந்தித்திருந்த நிலையில்...

இந்தியாவின் மகள் ஆவணப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இந்த ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது....

சிரியாவில் உளவாளியை சுட்டுக் கொல்லும் 10 வயது சிறுவன்!

சிரியாவில் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாலஸ்தீனியர் ஒருவரை, 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த முகமது சயீது இஸ்மாயில் முசாலாம் என்ற 19 வயதான இளைஞர், கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சுற்றுலா செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு ஐஎஸ் தீவிரவாத...

முன்னாள் பெண் போராளி புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டார்!

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியொருவர் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே முன்னாள் பெண்போராளியான கைவேலி பகுதியைச் சேர்ந்த பெண்ணையே கடத்திச் சென்றுள்ளனர். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்தார். நேற்றுக்காலை வழமை போலவே முன்பள்ளிக்கு...

தென்னிந்தியத் திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசனின் பவளவிழாவும் நூல் வெளியீடும்!

தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் பவளவிழா நேற்று புதன்கிழமை மாலை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி பீற்றோ மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பேராயரின் சகோதரன் அருட்பணி சு.மனோபவன் தலைமையில் அகவை வழிபாடு இடம்பெற்றது. இதில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண. கலாநிதி இராயப்பு யோசப் அருளுரை...

மணிக்கூட்டு வீதி கட்டுடைப்பு தொடர்பில் பொலிஸ் விசாரணை

யாழ்ப்பாணம், மணிக்கூட்டு வீதியின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்காரக் கட்டுக்களை உடைத்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (12) தெரிவித்தார். மணிக்கூட்டு கோபுர வீதியின் அழகுக்காக வீதியின் நடுவில் கட்டப்பட்டு இருந்த கட்டுக்களும் பூந்தொட்டிகளும் தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் யாழ்.மாநகர சபையால் நிர்மாணக்கப்பட்டு மின்விளக்குகளும்...

‘விபூசிகாவை விடுவிக்க தாய் வர வேண்டும்’

பாலேந்திரன் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்திலிருந்து நீதிமன்றத்தினூடாக விடுவிப்பதற்கு அவரது தாயார் ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வருகைதர வேண்டும் என கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி கூறினார். விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவிப்பதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (12) மனுத்தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்...

மலக்கழிவை எரிக்கும் இயந்திரம் உருவாக்கம் – மாநகர சபை ஆணையாளர்

மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றினை தாம் உருவாக்கி வருவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ். பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாநகர சபை எல்லைக்குள் இருந்து அகற்றும் மலக்கழிவுகள் கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்புத்...

என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின!

என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம் சாட்டியுள்ளார். சீனாவை தேவையற்ற விதத்தில் உள்நாட்டு அரசியலுக்குள் இழுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த நாட்டுக்கு அநீதியான விதத்தில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'சௌத் சீனா மோர்னிங் போஸ்டி'ற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு மஹிந்த...

சரத்குமாருக்கு எதிராக சிவக்குமார்?

நடிகர் சங்க தலைவர் தேர்தலில், சரத்குமாருக்கு எதிராக, இளைய தலைமுறை நடிகர்கள் சார்பில், நடிகர் சிவக்குமாரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள குணச்சித்திர நடிகர் ஒருவரின் வீட்டில், இளைய நடிகர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர் என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மே மாதம்...

இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்று இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என...
Loading posts...

All posts loaded

No more posts