- Sunday
- August 3rd, 2025

விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் அண்மையில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. நாடாளுமன்றத்தில் கூறிய கூற்றை பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஓய்வுவெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா,...

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். ஈழ...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச நியமனம் வழங்காது 3 வருட காலத்துக்கு சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்கள் தன்னார்வ முறையில் பணியாற்றியுள்ளனர் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில்...

அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. 2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ,...

தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது....

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்று வியாழக்கிழமை (05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி "செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே...

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய், வெளி மாகாணம் என்ன வேறு நாடா, ஆசிரியர் இடமாற்றம் மூலம் குடும்பத்தை சிதைக்காதே, சேவையின்...

”சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முகக் கவசம் அணிய வேண்டும்” என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது, நாள் பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முக கசவம் அணிவது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்....

சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை...

அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணி புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் புதன்கிழமை (4) வரை பத்துக்கு மேற்பட்ட மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஐந்து வரையான மண்டையோட்டு பாகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பொதி...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண்,...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இன்று (04) பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தினை வௌியிட்டார். "புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்ய திட்டமில்லை. புதிய சீர்திருத்தங்களின் தாக்கத்துடன் செய்யவே எதிர்பார்க்கிறோம்....

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,...

கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமானது கொழும்பில் உள்ள ஜெர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு சமாந்தரமான உயர் அங்கீகாரத்தை கொண்ட நிறுவனமாகும். இதனால் கிளிநொச்சியிலுள்ள குறித்த நிறுவனம் தனது சுயாதீன தன்மையை இழக்காது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிளிநொச்சியில் இயங்கிவரும் இலங்கை ஜேர்மன் தொழில்பயிற்சி நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை...

சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் , , பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 20 பேர் கைது...

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம்...

கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மே 17ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நிமோனியா பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உடனடியாக குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணம் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு அறிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகிய தேவந்தினி பாபு 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர்...

All posts loaded
No more posts