வட மாகாணசபை சார்பில் ஆளுநர் கருத்து வெளியிடமுடியாது: மாவை சேனாதிராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கருத்து எது என்பதை வடக்கு மாகாண ஆளுநர் பிதிபலிக்க முடியாது. எனவே அவ்வாறு வடக்கு மாகாண சபையின் சார்பில் ஆளுநர் கருத்து வெளியிடமுடியாது என உத்தரவிடுங்கள் - இவ்வாறு கோரும் 'ரிட்' மனு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...

யாழில் ரஞ்சித்தேவசிறி! போராட்டம் தொடரும் என சூளுரை!

இன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனைத்துப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி விஜயம் செய்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.தமது போராட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்தொடரும் எனவும் சூளுரைத்துள்ளார்! (more…)
Ad Widget

திவிநெகும சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும்

மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கு தாரைவார்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், (more…)

யாழில் பௌத்தத்தைப் பரப்பும் நோக்கம் இராணுவத்திற்கு இல்லை: ஹத்துருசிங்க

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள சில ஊடகங்கள் இராணுவத்தினர் பௌத்த மதத்தைப் பரப்புவதாகக் கூறி செய்திகளை திரிவுபடுத்திவருவதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.  (more…)

2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ?

2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த வாய்ப்பு உண்டு என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். (more…)

நலன்புரி நிலையத்தை மூடி மக்களை நடுக்காட்டில் விட்ட செயலை ஏற்றுக்கொள்ள முடியாது -ரதன்

வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து ஐ.நா. அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் நடுக்காட்டில் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மகிந்த சிந்தனையா? ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாட்டில் இதுவும் ஒன்றா என வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம். ரதன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)

கொழும்பு – யாழ் சொகுசு பஸ் – டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து! ஒருவர் பலி -ஆனையிறவில் அதிகாலை சம்பவம்

நேற்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேரூந்தும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் டிப்பர் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இச் சம்பவம் ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.டிப்பர் வாகனச் சாரதியின் சடலம் இன்னும் அதே இடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது. (more…)

யாழ் பல்கலை.வவுனியா வளாகத்தின் முதல்வராக கே.கே.அருள்வேல்

யாழ் பல்கலைகழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தின் கணக்கியல்த்துறையின் தலைவரும் வணிக மாணவர் ஒன்றியத்தின் காப்பாளருமான திரு கே.கே.அருள்வேல்  அவர்கள் வவுனியா வளாகத்தின் முதல்வராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரால் நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் திங்கட்கிழமை ( 01 . 10 . 2012 ) தனது  பொறுப்புக்களை ஏற்கிறார்

2000 முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று சிவில் பாதுகாப்புடன் இணைப்பு! கிளிநொச்சியில் நிகழ்வு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2000 பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெறும் என இலங்கையின் சிவில் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்தார்.   (more…)

வடபகுதியில் உயர் கல்வியை மேம்படுத்த சிறந்த செயற்திட்டங்கள்!

வட பகுதியில் உயர் கல் வித்துறையை மென்மேலும் மேம்படுத்துவதற்கு தொடர்ந் தும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இணை சுகாதார விஞ்ஞான கற்கைகள் பிரிவுக்கான புதிய கட்டடத்தை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நேற்றைய தினம் (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர்...

கிளிநொச்சியில் விவசாய ,பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் சிரமதானத்தில் 3000 பேர் வரையில் பங்கேற்பு!

கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் மாபெரும் சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வரையில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.  (more…)

கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக திரு.ஞானகாந்தன் நியமனம்!

கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக திரு ஞானகாந்தன் நியமனம் பெற்றுள்ளார் .வட மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் இவருக்கு நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டுள்ளது. (more…)

புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம், இரண்டாம் இடங்கள்

2012 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகளான டர்சிகா குகநேசன், சாம்பவி குகநேசன் ஆகியோரே அம்மாணவிகளாவர். (more…)

கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்

கிளி/மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி சந்திரகுமார் லக்சிகா, கிளி/திருவையாறு ம.வி மாணவன் பரமானந்தன் சாரலன், கிளி/ம.வி தேவராசா சபில்சன் ஆகியோர் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்று பெருமை சேர்த்துள்ளனர். (more…)

புலமைப்பரிசில் பரீட்சை! முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு மகாவித்தியாலய மாணவி முதலிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு மகா வித்தியாலய மாணவி செல்வி சுரபி ரஞ்சித், புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.முதலிடத்தைப் பெற்ற மாணவி சுரபி ரஞ்சித் தனது பெறுபேறு தொடர்பில் கூறுகையில், (more…)

புலமைப்பரிசில் பரீட்சை; யாழ். மாவட்டத்தில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அபிராம் முதலிடம்

நடத்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதையடுத்து முடிவுகளின் படி யாழ் மாவட்டத்தில் இம்மாணவன் 193 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார். (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி நகரில் நடத்தியிருந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. (more…)

பல்கலைக்கழக விரிவுரையாளர்களது சம்பளம் உயர்த்தப்படுகிறது! பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வருமா?

ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது சம்பளம் 36 வீதத்தில்  இருந்து 73 வீதம் வரையில் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ண இன்று தெரிவித்துள்ளார். (more…)

பசில் ராஜபக்சவை கல்வி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்?

கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் கல்வி அமைச்சின் பிரதியமைச்சராக மோகன் லால் குரே நியமிக்கப்படவுள்ளார். (more…)

முறையான அபிவிருத்தி வன்னியில் நடக்கவில்லை; ஜனாதிபதியிடம் முறையீடு

போரால் பாதிக்கப்பட்ட பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை, நிர்வாகக் கட்டமைப்புகளில் போதிய ஆளணி வசதி இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் நெருக்கடிகளையே எதிர்நோக்கி வருகின்றனர்.இவ்வாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts