2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் O/L பரீட்சை!!

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பான ஆசிரியர் பயிற்சி குறித்த கலந்துரையாடல் நேற்று (16) மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது, 2026 முதல்...

வட பகுதி மனித புதைகுழிகள் : அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது!!

வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன்...
Ad Widget

பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை!! ஆனால் ராஜபக்ஷகள் அதனை செய்தனர்!!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷகள்...

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இது...

கோப்பாய் பகுதியில் மதுபான சாலையில் கைகலப்பு – முச்சக்கர வண்டி கொள்ளை!!

கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள மதுபான சாலையில் கைக்கலப்பில் ஈடுபட்டவர்கள், வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மதுபான சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மது அருந்திக் கொண்ட இரு தரப்பினர்கள் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து, மதுபான சாலை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து,...

பலாலி கிழக்கு விரைவில் விடுவிக்கப்படும் – இளங்குமரன் உறுதி

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். பலாலி பகுதியில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி அப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள்...

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்!

”யாழ் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடவின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் தீ பரவல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் திங்கட்கிழமை (16) தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் கடைகள் தீப்பற்றி எரிகின்றன. பலத்த காற்று வீசுவதானால் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகத்தினால் தீபரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசப்படக்கூடும்...

யாழ் மாநகர சபை தமிழரசு வசம் – முதல்வரானார் மதிவதனி

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் விழாக்களின் போது அதிகமான ஒலி எழுப்பும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அது தொடர்பாக முறையிடலாம்!!

யாழ்ப்பாணத்தில் திண்மக் கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,...

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று!!

யாழ். மாநகரசபையின் மேயரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (13) நடைபெறவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டு என்பன ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளன. அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் யாழ் மாநகரசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10,370 வாக்குகளைப்பெற்று 13 ஆசனங்களையும்,...

முள்ளியவளையில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட பௌத்த தோரணம் : இனம்தெரியாதோரால் அகற்றல்!

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அண்மையில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம் புதன்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம், முள்ளியவளை கல்லூரிக்கு அருகிலுள்ள தனியார் நிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக அங்கு பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் வெசாக் தோரண அமைப்பொன்று...

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு!!

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்....

புங்குடுதீவு கடற்பகுதியில் கரையொதுங்கும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்படி அடையாளம் காணப்பட்ட பொருட்கள்...

கொவிட் மரணங்கள் தொடர்பில் சுகாதார பிரிவு வௌியிட்ட தகவல்

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார். “இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை...

மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு!!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மின் கட்டண திருத்தம் இன்று (12) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பில்அறிவித்தல் வெளியாகும் எனத்...

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும்...

இணுவில் – காரைக்கால் குப்பை விவகாரம்: எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம்!!

இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் குறித்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ”சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக்...

காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைப்பு

காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு புகையிரத நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் நூலகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மின்சாரம்...

காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பணம்!

புகையிரதத்தின் ஊடாக வடக்கிற்கான எரிபொருள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை முதலீட்டு வலயமாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்தின் முயற்சியாக 29 வருடங்களின் பின்னர் பெற்றோலியம் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம்...
Loading posts...

All posts loaded

No more posts