வட்டுக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் குளத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு!!

வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.8) மாலை 4 மணியளவில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய...

வடக்கு இளைஞர்களும் என்னைப்போல் அரசியலுக்கு வரவேண்டும் – நாமல்

என்னைப்போல் வட பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட தலைமை காரியாலயத்தினை நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்...
Ad Widget

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்ததாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவரது மரணத்துக்கான காரணம்...

மேல் மாகாணத்தில் நீக்கப்பட்டது ஊரடங்கு – பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, டேம் வீதி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ்,...

கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் – இரா.சம்பந்தன்

தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ் வருட தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம்...

அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன்...

கரவெட்டியில் அடையாளம் காணப்பட்ட கோவிட் -19 நோயாளிகள் மூவருடன் தொடர்புடையோரின் விவரத்தைக் கோருகிறது சுகாதாரத் துறை!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கரவெட்டியிலுள்ள...

மன்னாரில் பதில் கிராம அலுவலகரின் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன்(வயது-55) என்பவருடைய கொலையை கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு...

மேல் மாகாணத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவ தளபதி

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி, தற்போது மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த திங்கட்கிழமைக்குள் நீக்கப்படும் என்று அவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவரையும் அடையாளம் காணுமாறும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார். கவனமாக இருந்தால்...

கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம்!!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களுடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொ்றறினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 02, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் கொரோனா...

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு...

வடக்கில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமானது மாங்குளம் வைத்தியசாலை!!

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக இந்தப் பிரிவு நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக...

ஒரு மீற்றர் இடைவெளி என்பதை முடிந்தளவு மக்கள் பின்பற்ற வேண்டும்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொற்றாளர்களின் எண்ணிக்கையைப்...

கோப்பாய் கல்வியியற் கல்லுாரியில் 350 பேருக்கு சிகிச்சையளிக்கும் வசதி!!

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையினால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. அங்கு 100 வீதம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நேற்று மாலை 18 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் 18...

வெலிக்கட சிறைச்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று!!

கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு கைதிகளும், ஒரு பெண் சிறைச்சாலை அதிகாரியொருவமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான சிறைச்சாலை அதிகாரி முல்லேரியாவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தயசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேநேரம் கைதிகள் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவிய விதம்!!

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது குறித்து சுகாதார அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்கின்றது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மினுவங்கொடை கொரோனா கொத்தணி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது....

கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் பணி வடமாகாணத்தில் ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தொற்று நோயின் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் தமக்குரிய...

மன்னார் வைத்தியசாலை கோரோனா பிரிவின் தாதியர்கள் பலர் சுகயீன லீவு!!!

மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளோரை கண்காணித்து பிசிஆர் பரிசோதனை முன்னெக்கப்பட்டும் நோயாளர் விடுதியில் கடமைக்கு அமர்த்தப்பட்ட 13 தாதிய உத்தியோகத்தர்களில் 7 பேர் விடுப்பில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதனால் 6 தாதிய உத்தியோகத்தர்கள் மட்டும் கடமையில் இருப்பதால் பணிச் சுமை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா...

அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்ன? – சுரேன் ராகவன் கேள்வி

அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்னவென நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் கைதிகளாக எத்தனை பேர் உள்ளனர் எனவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது எனவும் தெளிவுபடுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான...
Loading posts...

All posts loaded

No more posts