யாழ். மாவட்டத்திலும் 5000 ரூபா நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு – டக்ளஸ்

கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000...

கோவிட் -19 நோய்த் தொற்றைத் தடுக்கக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் – மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்! -மாவட்டச் செயலாளர் |

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் – 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பின்பற்றி கோரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கு ஒத்துழைக்கவேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கோவிட் -19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணிக் கூட்டம் மாகாண ஆளுநர்...
Ad Widget

வட மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி சேவை வழங்க மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பொதுப் போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்தார். அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

நாட்டை முடக்க முடியாது: நடைமுறைகளைப் பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நாட்டை முன்கொண்டு செல்ல முடியும் எனவும் சரியான...

அரிசிக்கான அதிகபட்ச விலை குறித்த வர்த்தமானி வெளியானது!

அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் அரசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக...

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வு!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல், வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிஸார் இணைந்து, கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரால் வலியுறுத்தப்பட்டது....

கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகள் பொதி விநியோகிக்கும் பணி நாளை ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் நடைமுறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்க இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் (05.11.2020) நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மாதந்த கிளினிக்கில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் மீண்டும்...

மன்னாரில் கிராம உத்தியோகத்தர் வெட்டிக் கொலை?

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு மன்னார் மாவட்ட பதில் நீதவான்...

இந்தியாவில் இருந்து படகு மூலம் வந்தவர் கீரிமலயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்!!

இந்தியாவின் இராமேஸ்வரம் ஈழத் தமிழர் அகதி முகாமில் இருந்த ஒருவர் தப்பி ஓடி வந்து கீரிமலையில் நின்ற சமயம் நேற்றைய தினம் இனம் கானப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2ஆம் திகதி அதிகாலை கரை இறங்கியுள்ளார். இவ்வாறு கரை இறங்கியவர் அங்கிருந்து மன்னார் நகரை அடைந்துள்ளார்....

யானை தாக்கி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் சாவு!

மாங்குளம் நகருக்கு அருகில் மல்லாவி வீதியில் யானை தாக்கி யாழ்ப்பாணத்தைச் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “சம்பவத்தில் கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தன் (வயது- 37) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார். தச்சுத்தொழிலாளியான அவர் மல்லாவி , கொள்ளவிலாங்குளம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்று விட்டு நேற்று...

யாழ். நகரில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டது!

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கடைகள் இன்று ( புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்குகடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது PCRபரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த...

கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள பொலிஸார்

யாழில் கொரோனோ தொற்றுடன் தொடர்புடைய நபர்களுடன் பேருந்தில் பயணித்த ஆறு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்த யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 30ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்ட வெள்ளவத்தை உணவக உரிமையாளர், மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும்...

திருநெல்வேலி சந்தை, கொக்குவில் சந்தை ஆகியவற்றை மூடும் நிலை!!

சுகாதார நடைமுறைகளை மீறி தொடர்ந்தும் அசண்டையீனமாக நடந்துகொண்டால் திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகள் பூட்டப்படும். என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் த.தியாகமூர்த்தி கூறியுள்ளார். கொரோனா அச்சம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழில் உள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில்...

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் கடல் நீரேரியிலிருந்து கடல்நீர் உட்புகுவதற்கு காரணம் என்ன? – மருத்துவர் சி.யமுனாநந்தா

யாழ்ப்பாணம் கடல் நீரேரி அண்மைய பௌர்ணமி நாளில் தரைப்பகுதிக்குள் அசாதாரணமாக ஊடுருவிய காரணம் பற்றிய கருதுகோள் தொடர்பில் மருத்துவர் சி.யமுனாநந்தா தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடரிபில் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்றத்தின் அடிப்படையில் சுண்ணாம்புக் கற்பாறைகளால் ஆனது. இப்பாறைகளுக்கு இடையே மழைநீர் பருவகாலங்களில் தேங்கி வில்லை போன்ற கட்டமைப்பில் காணப்படுகின்றது. இவ்வில்லை போன்ற மழைநீர்...

இலங்கையில் பரவும் வீரியமான கொரோனா வைரஸ் – சமூக இடைவெளி குறித்து முக்கிய தீர்மானம் இன்று

இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகம் என்பதனால், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது போதுமானதா? அல்லது அதனை 2 மீற்றராக அதிகரிப்பதா? என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து இன்று (பதன்கிழமை) தொழில்நுட்பக் குழு கூடி ஆராயவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்தக்...

யாழில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று!

யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. கொழும்பு, கொட்டாஞ்சேனையில்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொரோனா தொற்று உறுதியாகி கொழும்பு தேசிய அவைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்றுவந்தவர்கள் என சுகாதார...

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு!

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது. அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில்...

கிளிநொச்சி கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள்!

கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரிற்கு சொந்தமான, கொழும்பு உணவகத்திலேயே இந்த நபரும் பணியாற்றினார். அந்த உணவகத்தில் பணியாற்றிய மேலும் 3 பேர் புங்குடுதீவு, வேலணை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட நபர், மயூரா ஹோட்டல், இல.46, கதிரேசன்...
Loading posts...

All posts loaded

No more posts