Ad Widget

இலங்கையில் பரவும் வீரியமான கொரோனா வைரஸ் – சமூக இடைவெளி குறித்து முக்கிய தீர்மானம் இன்று

இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகம் என்பதனால், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது போதுமானதா? அல்லது அதனை 2 மீற்றராக அதிகரிப்பதா? என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து இன்று (பதன்கிழமை) தொழில்நுட்பக் குழு கூடி ஆராயவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்தக் குழுவின் கூட்டத்தின் பின்னர், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக Hand Sanitiser எனப்படும் கைகளில் தொற்று நீக்கும் திரவத்தை பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts