Ad Widget

வட மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி சேவை வழங்க மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்து குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.

இருந்தபோதிலும், வெளி மாகாணங்களிலிருந்து போக்குவரத்துக்களை நிறுத்துவதற்கு அந்தந்த மாவட்டங்களின் தனியார் பேருந்து உரிமையாளர்களும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் ஊடாக கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

இதேவேளை, அரச பேருந்துகளும் வெளி மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தியுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் மாவட்டங்களுக்கு இடையில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை வழங்குவதற்கு அவர்களும் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

Related Posts