- Saturday
- May 2nd, 2026
இலங்கையில் மிகவும் இளைய வயது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது. தொட்டலக பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை நேற்று சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட...
வவுனியாவில் இன்று (09) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். ஏ-9 வீதி உட்பட...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை விடுவிப்பதற்குரிய கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அங்கிருந்து அனுப்புவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து மருத்துவர்களின் அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சு ஒருவாரகாலத்திற்குள் உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கத் தவறினால் ஆறான வாரம் தமது...
மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், வீதிகள் புனரமைப்பு மற்றும் குழாய் கிணறுகளை அமைத்துக் கொள்ளுதல் போன்ற வாய்ப்புகளும் மன்னார் மக்களுக்கு கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண...
பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்...
எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். கை சுத்திகரிப்பு மருந்துகள் உள்ளிட்ட தொற்று நீக்கிகளை (சனிடைசர்கள்) உற்பத்திகளை மேற்கொள்வதற்காகவும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பெரிய அளவிலான எதனோல் சந்தைக்கு...
கோவிட் – 19 நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று கூறி ஆயுர்வேத வைத்தியர் தம்மிகா பண்டாரவினால் வழங்கப்படும் ஆயுர்வேத பானத்தை (டொனிக்) வாங்குவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். கேகாலையில் உள்ள ஆயுர்வேத வைத்தியரின் வீட்டிற்கு அருகே ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆயுர்வேத வைத்திய பானத்தை அண்மையில் சுகாதார அமைச்சர்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும்...
2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது கணிசமாக...
தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சபையில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கோரிக்கையினை விடுத்தார். வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பாக முடிவுகளை...
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம், நாட்டின் மின்...
வடக்கு மாகாண சபைக்கு உள்பட்ட வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 27 மருத்துவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 மருத்துவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா...
ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச்...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, பிணை விண்ணப்பத்தை நாளை புதன்கிழமை நீதிமன்றம் பரிசீலனைக்கு ஒத்திவைத்ததுடன் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோயில் வீதியைச் சீரமைக்கும்...
வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
நாட்டில் தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு மரணமும்...
புரெவி புயலின் தாக்கத்தை அடுத்து நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. 112 மீனவ குடும்பங்களின் படகுகள், இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து அசாதாரண சூழ்நிலையால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடரும் மழை, காரணமாக கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும்...
பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு (2020.12.03) இடம்பெற்றது. சுற்றூடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து மீள்சுழற்சி கொள்கலன் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது....
ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை முதல், குழந்தைகள், பெண்கள் உள்பட, 345 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஞாயிறு மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சுமார்...
யாழில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்.மாவட்டத்தில் பாரிய...
Loading posts...
All posts loaded
No more posts
