Ad Widget

கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு மீனவர்கள் – படகுப் பயணங்கள் நிறுத்தம்

புரெவி புயலின் தாக்கத்தை அடுத்து நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன.

112 மீனவ குடும்பங்களின் படகுகள், இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து அசாதாரண சூழ்நிலையால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தொடரும் மழை, காரணமாக கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும் படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமையால் இம்மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்தார்.

Related Posts