Ad Widget

தரம் குறைந்த சனிடைசர்களின் விற்பனை அதிகரிப்பு!!

எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கை சுத்திகரிப்பு மருந்துகள் உள்ளிட்ட தொற்று நீக்கிகளை (சனிடைசர்கள்) உற்பத்திகளை மேற்கொள்வதற்காகவும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பெரிய அளவிலான எதனோல் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சந்தையில் தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் உயர்தர சனிடைசர்களில் 80 சதவீதம் எதனோல் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளதுடன், ஆனால் 60 சதவீதத்திற்கும் குறைவான எதனோல் கொண்ட சனிடைசர்களை அதிகாரிகள் சந்தைகளில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சோதனைகளை மேற்கொள்வதற்கும் தரம் குறைந்த சனிடைசர்களை கைப்பற்றுவதற்கும் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts