Ad Widget

கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது – இரா. சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக செயற்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி என்று எவரும் கூற முடியாது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான கூட்டமைப்பு, மக்களினால் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல், வட மாகாண சபை மற்றும் பிற உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் பல நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது, அத்தகைய அரசியல் கட்சியை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்றும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.

Related Posts