Ad Widget

2021ஆம் ஆண்டில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் – சுதத் சமரவீர

2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது கணிசமாக குளிர்ந்த வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு அந்த வசதி இல்லை என்பதோடு, வைரஸ் தொடர்பாக இதுவரை எந்தவொரு தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்படவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படும் வரை இலங்கை எந்த கொரோனா தடுப்பூசியையும் பெறாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts