- Saturday
- May 2nd, 2026
மாநகர முதல்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனம் தேவையில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சபையின் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார். அத்தோடு தனது மாதாந்த ஊதியம், எரிபொருள் கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுள்ள அவர், அதனை சபையின் பொதுப் பணிகளுக்கு செலவிட திட்டங்களை வகுக்குமாறு கேட்டுள்ளார். தனது 37ஆவது வயதில் யாழ்ப்பாணம் மாநகரின் பிதாவாக பதவி ஏற்ற அவர்,...
2021ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. 2021ஆம் ஆண்டில் உலக மக்கள் அனைவரும் நோய்த் தொற்றின்றி சாந்தியும் சமாதானத்துடனும் வாழவேண்டும் என்று சிகிச்செ தீபங்கள் ஏற்றி நல்லூரானை வழிபட்டனர். படங்கள் நன்றி – ஐ.சிவசாந்தன்
நாட்டில் கொவிட்-19 பரவுவதை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில்நேற்று (வியாழக்கிழமை) 607 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், உடுவிலில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில்...
மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப்...
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களுடனான...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று (30) இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (31) இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன. குறித்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும்...
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் உள்ள தனியாரின் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காகச் சென்ற பெண்ணொருவர், அக்காணியில் அமைந்துள்ள மண் கிணற்றில் குறித்த எச்சங்கள் இருப்பதை அவதானித்து அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலகர்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் இதுரையான காலப்பகுதியில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில், 26 பேர் பூரண குணமடைந்து...
உலக நாடுகள் பலவற்றில் தற்பொழுது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and...
மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே பொதுச் சந்தைத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த சில நாள்களாக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் கடந்த வாரம் 12 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தம்புள்ளை மொத்த விற்பனை...
மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (புதன்கிழமை) 130 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இழந்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 05 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை சாரையடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைத்ததும் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட குருதிப்போக்குக் காரணமாக இன்று காலை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும்...
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ப.மயூரனும் போட்டியிட்டனர்.. நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டு தடவைகள் தோல்வியடைந்ததால் தவிசாளர் தனது பதவியை இழந்துள்ளார். அதனால் நல்லூர்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வணக்கம் செலுத்தினார். இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாநகரின் 23ஆவது முதல்வராகப் பதவியேற்ற அவர், தனது தரப்பு உறுப்பினர்களுடன் இணைந்து தியாக தீபனின் நினைவுத் தூபில் வணக்கம் செலுத்தினார்.
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கொரோனா...
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக்...
Loading posts...
All posts loaded
No more posts
