Ad Widget

‘எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – யாழில் உறவுகள் போராட்டம்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் உறவுகளை கொள்ளாதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா, மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை கணவன்மாரை தங்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதே வேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts