யாழ்ப்பாணம் மாநகரின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு!!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். முன்னதாக, இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மாநகரசபையின்...

மணிவண்ணனும் முதல்வர் பதவிக்குப் போட்டி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் போட்டியிடவுள்ளார். “பாதீடு தோற்கடிக்கப்பட்டு பதவியிழந்த முதல்வர் ஆனல்ட்டை மீண்டும் களமிறக்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அவர் மீளவும் முதல்வராகத் தெரிவானால் பாதீடு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும் நிலை ஏற்படும். எனவே தற்போதனைய ஆட்சிக்காலத்தைத் தக்கவைத்து அனைவருடனும் இணைந்து உறுதியான ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்....
Ad Widget

மருதனார்மடம் கொத்தணியால் மேலும் எண்மருக்கு தொற்று; உடுவிலில் 2 குடும்பங்கள்

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் (டிசெ. 29) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்....

ஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன்

மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த தீர்மானம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட...

2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தீர்மானம்

அடுத்த ஆண்டு 2 இலட்சதிற்கு மேற்பட்ட சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமுர்த்தி முகாமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அடிப்படையில் பெண் தொழில்முனைவோரை தெரிவுசெய்து, வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து...

இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம்!

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச...

யாழில் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நிகழ்வை அறிமுகம் செய்யும் வகையிலான ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நண்பகல், யாழ்.பல்கலைக்கழக சபா மண்டபத்தில், முகாமைத்துவ...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் பின் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. ‘கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொள்ளாதே’, ‘விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை...

சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசே உமது பலத்தை சிறுபான்மையின் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை...

கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ் வந்த தென்னிலங்கை வாசிக்கு கொரோனா!!

கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில் கொரோனா நோயாளி ஆக இனம் காணப்பட்டவர்களில், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த நபரும் உள்ளடங்குவாதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நபர்,...

ஜனவரி முதலாம் திகதி திரையரங்குகளை மீளத் திறப்பதற்கு பிரதமர் அனுமதி

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் நாடுமுழுவதும் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அனுமதியளித்துள்ளார். அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள திரையரங்குகள் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும். இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த...

மருதனார்மடம் கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 109ஆக உயர்வு!!

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒரு வியாபாரிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (டிசெ. 27) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன்மூலம்...

வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதி!

வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கொரோனாத் தொற்று...

முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்டவரில் கண்டறியப்பட்ட வைரஸ் வீரியம்மிக்கது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கொரோனா...

யாழ். மாநகர சபை முதல்வர் பதவிக்கு மீண்டும் ஆர்னோல்ட் வேட்பாளர்!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவிக்கு மீண்டும் இம்மானுவல் ஆர்னோல்டை வேட்பாளராக நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இருப்பினும், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு யாரை பிரேரிப்பது என்பது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் உறுதிசெய்யப்படவில்லை. யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை மேயர் மற்றும் தவிசாளர்...

வரலாற்று பெருமை மிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீள் உருவாக்கம்!!

வரலாற்று பெருமை மிக்க யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நேற்று (23) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை - காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு...

மருதனார்மடம் சந்தைக் கொத்தணி வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியது என எச்சரிக்கை!

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது....

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 100ஐ கடந்தது – கிளிநொச்சியிலும் தொற்று!

யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக வடக்கில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகிய இரண்டு கூடங்களிலும் 601 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது....

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தது முன்னணி!

யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்கத் தயாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு, நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிய கட்டுப்பாடுகள்? – இராணுவத் தளபதியின் அறிவிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார். இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...
Loading posts...

All posts loaded

No more posts