- Saturday
- May 2nd, 2026
2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடையும்போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணையின்போது,...
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா, மொடேர்னா, பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹெமந்த டொடாம்பஹல...
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான “உதயன்” மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு மார்ச் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய...
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது யாழ் குடாநாட்டில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்துள்ளது. இன்று...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, மஹரகம அபேக்ஸா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை இனங்காணப்பட்டு...
யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 412 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்...
பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும் விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே ஒன்று கூடுவது, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது, விருந்துபசாரங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார். மேலும் கூடுமானவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை...
மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனினும் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட 40 அணி மாணவர்களினால் திருவெண்பா ஒதுதல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கபட்டது. இன்றைய கொரோனா கால சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தங்களுடன் அனைத்து மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறும் மற்றும்...
கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஔடதம் ஏற்கனவே தேசிய...
இலங்கையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் மையமாக கொழும்பு மாறிவிட்டது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது, எனவே பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க குறைந்தபட்சம் ஜனவரி 1 ஆம் திகதி...
வடக்கு மாகாணத்தின் இரண்டு உள்ளூராட்சி அதிகாரசபைகளின் புதிய முதல்வர் மற்றும் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் நாடாத்தப்படும் திகதி குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சனினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உள்பட மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் 2021 ஜனவரி 11ஆம் திகதி முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். அன்றிலிருந்து தரம் 1 முதல் தரம் 5 வரையான...
தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாகநேற்று (திங்கட்கிழமை), க.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த...
யாழ்ப்பாணத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 382பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதில் கோப்பாய், ஊர்காவற்துறை மற்றும் இனுவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் அனைவரும்...
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிச்சயமாக தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாடு முழுவதும் பத்து இலட்சம் ரண்பிம காணி உறுதிபத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் வடமேல் மாகாணத்திற்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நிகழ்வு குருநாகல் ரண்சர மண்டபத்தில் இடம்பெற்ற...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கட்டது. பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நீதிமன்ற அறிவித்தலை சேர்ப்பிப்பதற்கு சென்ற போதும் அவர்கள் அங்கு இல்லை...
யாழ்ப்பாணம் மானிப்பாயில் 8 மாத ஆண் சிசு ஒன்று மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (17) காலை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிசு, சில மணி நேரங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. சிசுவின் உயிரிழப்புக் காரணம் தெரியாத நிலையில், சடலத்தைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று...
திருநெல்வேலி சந்தையில் வைத்து பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட நபர், மருதனார்மடம் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதனால் மருதனார்மடம் கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. “மருதனார்மடம் சந்தி கடைத் தொகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கு கோரோனா தோற்று...
Loading posts...
All posts loaded
No more posts
