- Saturday
- May 2nd, 2026
கல்வியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 3,772 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் சேவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை புதிய தவணைக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நியமனக்கடிதங்கள் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா...
யாழ். மாவட்டத்திற்கு நுழையும் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு 1041 குடும்பங்களைச் சேர்ந்த...
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 469 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா பட்டாணி சூர் பகுதியில்...
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாக அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்தார்....
மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று (ஜன. 4) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர்...
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்குவதாக யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி சற்குணராஜா அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையையும் கருத்திற் கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிரேஷ்ட...
விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன்,...
யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு வலியுறுத்தினர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடயத்தை...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளின் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்...
தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க முன்வர வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (3) கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை...
“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்தால்தான்...
தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறினார். எனினும் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மறு...
சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் வவுனியா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்தத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இந்திய கடலோரகக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் கடலோர காவல்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு நிச்சயம் எட்டப்படுமென நம்புவதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் விடயம் பற்றி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் கதைத்திருக்கின்றேன்...
நாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே குறித்த தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு,...
ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை பணத்தை வங்கியில் வைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களிடமிருந்து இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக பொலிஸ்...
கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது....
இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, புங்கங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
