- Saturday
- May 2nd, 2026
வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 54 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரில் பசார் வீதி உள்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று 114 பேரிடம் மாதிரிகள்...
யாழ்.மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களில் பயணிப்போருக்கு இன்று அதிகாலை 3 மணி முதல் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் எழுதுமட்டுவாழ் சந்தியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை வரும் ஜனவரி 25ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு கல்வித்துறையில் தற்போதைய நெருக்கடி நிலமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்...
கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து செயற்பாடின்றி முடிங்கியுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் என அரச தரப்பு தெரிவித்துள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பினரை இந்திய வௌிவிவகார அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசியபோது யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மீளத் திறப்பது மற்றும்...
கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பிரேத்தியேக வகுப்பு நடத்திய பாடசாலை மூடப்பட்டதுடன் அதிபர், ஆசிரியர் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வதிரி திரு இருதயக் கல்லூரியே இவ்வாறு 20ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெறாது தரம் 5 புலமைப்பரிசில்...
யாழ்ப்பாணம், நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் புதன்கிழமை மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்தப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் வர்ணப்பூச்சு வேலை இடம்பெற்றுள்ளது. அதற்காக கால் போத்தல் சாராயப் போத்தலில் ரின்னர் விட்டு வைக்கப்பட்டிருந்துள்ளது....
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை 222.3 கிலோ மீற்றர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.3 ரிச்டெர் என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின், நங்குங்குரு குடியேற்றத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 935.0 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் மேலும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று...
உடுவில்- அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துளது. வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பலொன்று, நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் மேற்கொண்டுள்ளது. 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர், முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள்...
யாழ். மாவட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள சந்தைகளை தற்போதைய நிலைமையில் மீளத் திறப்பது சாத்தியமற்றது என யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் நிகழ்வுகள் நடத்த தடை எனினும், 50 பேருக்குட்பட்ட கூட்டங்கள் ஏனைய செயற்பாடுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருள்கள் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் தென்பட்டுள்ளன. சுழிபுரம் மத்தியில் உள்ள காணி ஒன்றை உரிமையாளர் நேற்று துப்புரவு செய்த போது அவை தென்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார், மல்லாகம்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய அரசியலமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த்...
புதிய சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அபாயம் அதிகமுள்ள மேல் மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் விளையாட்டுப்போட்டிகளை ஆரம்பிக்க முடியும். மேல் மாகாணத்தில்...
வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மத்தியில் தற்பொழுது வாழ்வோரின் பெயர், 2020 ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, சம்பந்தப்பட்டவர்கள் தற்பொழுது வடக்கு மாகாணங்களில் பதிவு...
இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது இலங்கைக்கு முக்கியதுவமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த...
யாழில் நேற்று (புதன்கிழமை) வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே 136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் நேற்று மாலை சுழல் காற்று வீசியது. இந்த...
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இது குறித்த அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி பாடசாலைகளை மீண்டும் திறக்கும் செயன்முறை குறித்து அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொது சுகாதார...
யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றினை தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் இருந்து குறித்த உணவகம் சுகாதார அதிகாரிகளினால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்தியத் துறை மாணவர்களின் பாவனைக்கென அந்த துறையின் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ரீசோட்டுகளின் பின் புறத்தில் பல்கலைக்கழக இலட்சினை பொறிக்கப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த கருத்துக்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் துணைவேந்தர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சித்த வைத்தியத் துறை மாணவர் ஒன்றியத்தின் தலைவர்...
Loading posts...
All posts loaded
No more posts
