Ad Widget

இந்திய கோவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க தயார்- இந்திய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது இலங்கைக்கு முக்கியதுவமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக்கொடுக்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்குமாறும், தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்புடன் இருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று (06) தினேஸ் குணவர்தனவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலாள பரஸ்பர ஒத்துழைப்பு, பொருளாதாரம், நிதி, வர்த்தகம், பாதுகாப்பு, கடற்றொழில் மற்றும் கொவிட் 19 தொற்று உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கொவிட் தடுப்புக்காக இலங்கைக்கு, இந்தியாவினால் பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.

Related Posts