Ad Widget

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட தீர்மானம்!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளின் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி பொதுத்தரா தர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் மார்ச் மாத்தில் நடாத்த தீர்மானித்துள்ளது.

இதேவேளை, முன்னதாக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள ஆரம்ப பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகள் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts