Ad Widget

எல்லைகளை முடக்கி பரிசோதனை – யாழ் மாவட்ட அரச அதிபர்

யாழ். மாவட்டத்திற்கு நுழையும் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு 1041 குடும்பங்களைச் சேர்ந்த 2,807 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது யாழ் மாவட்டத்தில் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்படுவதாகவும் க.மகேசன் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்களும் மிகவும் அபாயகரமான காலப்பகுதியாக இப்பதனால் மாவட்டத்தில் தொற்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திரையரங்குகள், பாடசாலைகள் மற்றும் ஏனைய விடயங்களிலும் இயல்பு நிலையை ஏற்படுத்தும் முகமாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts