- Saturday
- May 9th, 2026
வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 27.2 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக அமையப்போகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு...
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதும் நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதில்லை என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் தெளிவான கொள்கையாகும். ஆனால், இந்த விடயங்களில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் முழுமையான உபகரணங்களுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கான இரண்டாவது வரவு- செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான செலவீனங்களை முன்மொழிந்து ஆற்றிய உரையிலேயே இத்தகவலை அவர் தெரிவித்தார். அந்த உரையில் அவர் மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும். தமிழ் மக்களுக்குப் பொருத்தமான வேளையில் கூட்டமைப்பின் முடிவை அறிவிப்போம். இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு, தமிழசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்கள் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள்,...
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.எம்.எஸ்.இந்திரகுமார வன்னிநாயக்கா (வயது 30) வியாழக்கிழமை (18) காலை சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி, பொலிஸ் அதிகாரி வியாழக்கிழமை காலை உணவு உண்ட நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். சிகிச்சைக்காக இவரை, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதே அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்...
'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களை பயன்படுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. உடனடியாக முதலமைச்சர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்' என ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதம், இரண்டாவது நாளாக கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று...
சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. இதில் சிபிராஜிற்கு ஜோடியாக அருந்ததி நடித்திருந்தார். மேலும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்திருந்தது. கடத்தல் கும்பலிடமிருந்து தனது மனைவியை நாயின் உதவியுடன் சிபிராஜ் கண்டுபிடிப்பதை திரைக்கதையாக அமைத்திருந்தார்கள். இப்படம்...
ஆரம்ப கால சினிமா படங்களில், வருவதுபோல் நடிகர்களே பாடல்களை பாடுவது, இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. விஜய், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த பட்டியலில் சரத்குமாரும் முக்கிய இடம் பிடிக்க ஆசை படுகிறார் போல உள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இரண்டு மூன்று பாடல்களை பாடியுள்ள அவர் இப்போது நடித்து...
யாழ். பல்கலைக்கழகத்தினால் முதல் தடவையாக எற்பாடு செய்யப்பட்ட பௌதீக,மனிதவள, பொருளாதார,வணிகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் தேசிய ஆராய்ச்சி மாநாடு நேற்று யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவரும் பேராசிரியருமாகிய ஜீ.மிகுந்தன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரும் பேராசிரியருமாகிய வசந்தி அரசரட்ணம்,அமெரிக்க தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி...
தமிழ் பேசும் மக்களனைவரையும் ஒரே நாட்டவர் என்ற ரீதியில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இணையாக பராமரித்தவர் வருபவர் எமது ஜனாதிபதியே என சிறுதொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (18) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் 2015 ஐந்தாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும்...
முல்லைத்தீவு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை ! உங்கள் பகுதிக்கு வந்து உங்கள் மத்தியில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பௌத்த குருமார் மற்றும் அனைத்து சமய பெரியார்களிடமும் ஆசிர்வாதம்பெற்றவனாக உரையாற்ற விரும்புகிறேன். குறிப்பாக 30 வருட காலமாக நீங்கள் இருளில் மூழ்கியிருந்தீர்கள். இந்த 30 வருட காலத்தில்...
ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொரு தமிழரும் மிகக் கவனமாக பரிசீலித்து, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி...
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்புக்கள் மத்தியில் அங்கீகரிக்க வைத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணைகள் இன்று காலை வடமாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மதிய...
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரையில், 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து, அதற்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்று அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதே எமது அரசியல் இலக்கு. இதுவே நடைமுறைச் சாத்தியமான வழிமுறையும். இதையே நான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலம் தொடக்கம்...
மத்திய அரசால் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணம் ஆறாவது இடத்தில் இருப்பதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17) இடம்பெற்றது. இதன்போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.விமலசேன புதன்கிழமை (17) தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததுடன் சிலர்...
யாழ்.நகரிலுள்ள 3 பிரபல நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அத்திணைக்களத்தை சேர்ந்த ஐவர், புதன்கிழமை (17) திடீர் சோதனை மேற்கொண்டதாக யாழ்.மாவட்ட தொழில் திணைக்கள பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இந் நிறுவனங்களில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி சேகரிக்கப்படாமை,...
வடமாகாண பேரவை செயலகத்துக்கு அதிகப்படியான வசதிகள் செய்யவேண்டியிருப்பதால் அதற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17)...
தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான சட்ட அமுல்படுத்தலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் வியாழக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஐரோப்பிய ஆசிய தொழில் கூட்டுறவு மாநாடு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 3 திகதி...
யாழ்.கெருடாவில் மாயவனூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை புதன்கிழமை (17) முதல் காணவில்லையென சிறுமியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடுப்பிட்டியிலுள்ள சமுர்த்தி வங்கிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற சிறுமி இதுவரை வீடு திரும்பவில்லையென சிறுமியின் பாட்டி முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...
Loading posts...
All posts loaded
No more posts
