பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.எம்.எஸ்.இந்திரகுமார வன்னிநாயக்கா (வயது 30) வியாழக்கிழமை (18) காலை சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி, பொலிஸ் அதிகாரி வியாழக்கிழமை காலை உணவு உண்ட நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். சிகிச்சைக்காக இவரை, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதே அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குருநாகலை சேர்ந்தவரென்றும் பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts