யாழ். பல்கலைக்கழகத்தினால் முதல் தடவையாக எற்பாடு செய்யப்பட்ட பௌதீக,மனிதவள, பொருளாதார,வணிகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் தேசிய ஆராய்ச்சி மாநாடு நேற்று யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவரும் பேராசிரியருமாகிய ஜீ.மிகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரும் பேராசிரியருமாகிய வசந்தி அரசரட்ணம்,அமெரிக்க தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் கரிம் எம்.மரிரா கலந்து கொண்டு இந்த மாநாட்டின் ஆராய்ச்சி செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த ஆராய்ச்சி மாநாட்டின் நோக்கமானது பல்கலைக்கழக மாணவர்கள் கற்றுவரும் துறைகளை மேலும் வலுச்சேர்க்கும் வகையிலும், அவர்களின் ஆக்கத்திறன்களையும் முன்னேற்றுவதற்கும் இந்த மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக மாநாட்டில் கலந்து கொண்ட ஆராய்ச்சி துறைகளின் போராசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக போராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.