ஜனாதிபதி மஹிந்த வென்றாலும் பதவியேற்கார்!!

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சில குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான...

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு தலையிடாது தமிழ்மக்களை அவர்களது விருப்பப்படி வாக்களிக்க விடவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்திக் கேட்டுள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...
Ad Widget

பாக். பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை

2012ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி பகுதியில், 1560 கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(17) அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1984ஆம் ஆண்டு 13ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் ஆபத்தான ஒளடதங்களை கடத்தும் தடுப்புச் சட்டத்தின்படி மேல் நீதிமன்ற...

இலங்கை பெண்ணின் கோரிக்கையை மீளவும் பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள அழைப்புக்கு இணங்கி தாம் இலங்கையில் சென்று குடியேற விரும்புவதாக இலங்கைப் பெண்ணொருவர் விடுத்துள்ள கோரிக்கையை மீளவும் பரிசீலிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம், தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பரிசீலனை இரண்டு வாரத்துக்குள் இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது...

கே பாலச்சந்தர் உடல் நிலையில் லேசான முன்னேற்றம்!

இயக்குநர் கே பாலச்சந்தர் உடல் நிலையில் இன்று மேலும் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் உடல் நிலை கவலைக்கிடமானது. அவரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். அவரை ரஜினிகாந்த் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் போய்ப் பார்த்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் கே பாலச்சந்தர் உடல்...

இப்போதும் நானே பிரதம நீதியரசர்! எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும்!! – ஷிராணி

"தற்போதும் இலங்கையின் பிரதம நீதியரசர் நானே. எனக்கு எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும். அரசியலுக்கு வரும் எவ்வித நோக்கமும் எனக்கில்லை." இவ்வாறு மஹிந்த அரச தரப்பினரால் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்றுத் தெரிவித்தார். 2013 ஜனவரி முதல் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும்,...

பகிரங்க விவாதத்துக்கு மஹிந்தவை அழைக்கிறார் மைத்திரிபால!

அடுத்த மாத முற்பகுதியில், முடிந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரட்டும். இவ்வாறு நேற்று புதன்கிழமை சவால் விடுத்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி குறித்து தான்...

கிளி.யில் பிக்கப் வாகனத்தை மோதித் தள்ளியது புகையிரதம்: இருவர் படுகாயம்

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தி உருத்திரபுரம் வீதியில் புகையிரத கடவையைக் கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனத்தை புகையிரதம் மோதியதில் வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்து தொடர்பில் தெரிய வருவது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெறமாட்டோம் – முதலமைச்சர்

தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண பேரவைச் மண்டபத்தில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான...

மீண்டும் மலருகிறது அமெரிக்க-க்யூப உறவு

அமெரிக்காவும் க்யூபாவும் தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்யும் முகமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன. கடந்த ஐம்பது வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையே இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரரான ஆலன் கிராஸ் விடுவிக்கப்பட்டவுடன், அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை...

கிறிஸ்துமஸ் பண்டிகையில் 6 புது படங்கள் ரிலீஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘பிசாசு’, ‘கயல்’, ‘கப்பல்’, ‘மீகாமன்’, ‘சுற்றுலா’, ‘வெள்ளைக்கார துரை’ ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. ‘பிசாசு’ படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். டைரக்டர் பாலா தயாரித்து உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். திகிலான பேய் படமாக தயாராகியுள்ளது. மிஸ்கின் எடுக்கும் முதல் பேய் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது. கிறிஸ்துமசுக்கு முன்னதாக 19–ந்தேதி இப்படம்...

ஐ படத்தில் நடித்தது விக்ரம்தானா?: வியக்க வைத்த புகைப்படம்

‘ஐ’ படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டியும், குறைத்தும் கஷ்டப்பட்டு, அதே நேரத்தில் இஷ்டப்பட்டும் நடித்துக் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். இதை அவரே விருப்பப்பட்டு செய்ததாக கூறப்பட்டது. தற்போது, ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் இணையதளத்தில்...

ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு – தவராசா

வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தடையாக இருக்கின்றார் என்பதற்கு ஆதாரங்களுடன் உரிய விடயங்களை படிமுறையாக தந்தால், வடமாகாண ஆளுநருக்கு எதிராக வடமாகாண சபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்துக்கான...

கணவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார்! – மனைவி

தனது கணவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் (வயது 26) முகமாலைப் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு சாட்சியமளித்தார் பிரபாகரன் பாலேஸ்வரி. ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு இன்று புதன்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதில் சாட்சியமளித்த குறித்த பெண்...

முல்லைத்தீவில் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

நாளை வியாழக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முள்ளியவளை ஐயனார் கோவில் வளாகத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரசாரக் கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதனையிட்டு நேற்று முதல் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் விசேட பாதுகாப்பு...

வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொடுக்கமாட்டார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியிலிருக்கும் வரை வடபகுதி மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சர்வாதிகார மனோநிலையில் இருக்கிறார். எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும்...

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஆரம்பம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இன்று ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போது முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறுகிறது....

ஊழலை ஒழிப்பதே எனது இலக்கு – ஜனாதிபதி

இலங்கையிலிருந்து வறுமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதே தனது இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற momentum வர்த்தக கலந்துரையாடலில் புதன்கிழமை(17) கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

ஊடகவியலாளர் வீட்டில் ஆவணங்கள் திருட்டு

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை (16) பகல் திருடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஊடகவியலாளரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நேரம், வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக...

எண்ணெய் கசிவு வழக்கு; ஜனவரி 14இல் கட்டளை பிறப்பிக்கப்படும்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின், சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறி, தெல்லிப்பளை...
Loading posts...

All posts loaded

No more posts