- Monday
- May 11th, 2026
வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்மப்பொருளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து. இன்று காலை கடற்கரையில் மஞ்சள் நிறத்திலான மர்ம பொருள் மிதந்து கரையொதுங்கியது. இதனை அவதானித்த பலர் பரபரப்பாகினர். இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர். அத்துடன் இதுகுறித்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்குவந்த பொலிஸார் அந்தப் பொருளை பார்வையிட்டு...
சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் தருவதால் மட்டும் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. குடிநீரை விட உணவுச்சங்கிலி மூலம் தான் பாதிப்புக்கள் ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளது என யாழ். மருத்துவ பீட பீடாதிபதி ச.பாலகுமரன், சனிக்கிழமை (24) தெரிவித்தார். சுன்னாகம் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (24) மதியம் சுற்றுச்சூழல்...
நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு மின் சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு இடவில்லை என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (24) மதியம் சுற்றுச்சூழல் அமையத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நொர்தன் பவர் நிறுவனத்தை மூடும்படி தமக்கு எந்த அறிவித்தலும்...
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் கொழும்பிலுள்ள அமைச்சர் சுவாமிநாதனின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது , வலி.வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிளை விடுவித்து மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடியுள்ளனர். எனவே...
வைரமாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1954ல் அறிமுகமான பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், இதுவரை சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அந்த கால எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் இந்த கால அஜீத், விஜய் வரை இவர் சுமார் 60 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் நடித்து வந்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்...
விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கியதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வல்வெட்டித்துறை எள்ளங்குளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இராணுவ முகாமுக்குள் பந்து சென்றுவிட்டது. அதனை எடுப்பதற்கு சென்ற...
மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் தமிழரசுக் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கிலும் கட்சியின் முடிவென்ற பெயரில் இம்மாதம் 3ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுக்கு மாறாக, மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிப்படையாக...
நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுதல் தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமான கைவிடப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை வைத்தியர் ஜி.செந்தூரன் தெரிவித்தார். சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர்...
வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்...
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக நெல்லியடியைச் சேர்ந்த பெண்ணொருவர்(வயது 40) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (22) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நெல்லிடிக்கு செல்வதற்காக, ஆவரங்கால் சந்தியில் பஸ்ஸூக்காக காத்திருந்தபோது, குறித்த பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் நெல்லியடியில் இறக்கிவிடுவதாகக்கூறி ஏற்றியுள்ளார். நெல்லியடிப்...
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு...
மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்தார். இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்கா, முன்னாள் சிறைச்சாலை புனர்வாழ்வு...
"ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இராணுவம் மூலம்ஆட்சியைத் தக்க வைக்க மஹிந்த ராஜபக்ஷ சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டை என்னால் முழுமையாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், கொழும்பில் முக்கிய பகுதிகளில் இராணுவ குவிப்பும் ஒரு சில பகுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர் எனவும் நான் அறிந்தேன். இது தொடர்பாக பொதுமக்கள் பலர் எனக்குத்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார். நேற்று மாலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ கடிதத்தினை அன்ஜுன மஹேந்திரனிடம் ஜனாதிபதி கையளித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்னும் 6 நாட்களில் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரமெல் அப்பிள் பழங்களை எவரும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவற்றை எந்த வியாபாரிகளும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் அறிவித்துள்ள சுகாதார அமைச்சு இறக்குமதியாளர் அவற்றை மீள எடுத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒருவகைக் கிருமி தொடர்பான நோய் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதனால் இலங்கையில் அது பரவுவதைத் தடுக்க இந்த...
கடந்த 30 வருடகாலமாக அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்த வடக்கு மாகாணத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து துறை சார்ந்தவர்களும் பங்காளிகளாக மாற வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது....
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துவருகின்றமைக்கும் அப்பகுதியில் அமைந்துள்ள நொதேர்ன் பவர் கம்பனியின் செயற்பாட்டுக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ். மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருப்பதை நொதேர்ன் பவர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
விஜய் மிகவும் அமைதியானவர், இவருடன் நடிக்கும் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை இது தான். ஆனால், இவர் சமீபத்தில் தன் தந்தையால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளாராம். ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு எஸ்.ஏ.சி இயக்கி நடிக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இப்படம் ஜனவரி 30 தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்களில் விஜய்யின் தந்தை...
சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனுஷும் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுஷையே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கி சட்டை, இப்படத்தையும் தனுஷ் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வரை 18 லட்சத்தை எட்டியுள்ளது. ஆனால், தனுஷின்...
Loading posts...
All posts loaded
No more posts
