Ad Widget

தன்னை கடத்த முற்பட்டதாக, பெண்ணொருவர் முறைப்பாடு

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக நெல்லியடியைச் சேர்ந்த பெண்ணொருவர்(வயது 40) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (22) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லிடிக்கு செல்வதற்காக, ஆவரங்கால் சந்தியில் பஸ்ஸூக்காக காத்திருந்தபோது, குறித்த பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் நெல்லியடியில் இறக்கிவிடுவதாகக்கூறி ஏற்றியுள்ளார்.

நெல்லியடிப் பகுதிக்கு கொண்டு செல்லாமல், மாற்றுவழியாக இளைஞன் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதையடுத்து, இளைஞனிடம் தான் வினாவியபோது, சத்தம் போடாமல் அமைதியாக வா, கத்தினால் அடிப்பேன் என்று இளைஞன் கூறியதாக பெண் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து, முறைப்பாடு பதிவு செய்ய வந்ததாக பெண் கூறியுள்ளார். முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர், பெண்ணை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தாக பொலிஸார் கூறினர்.

முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் சேர்ந்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்றும், சிறுவர்கள் இது பற்றி அறியாவிட்டாலும் பெரியவர்கள் இது பற்றி அறியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாக இருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts