Ad Widget

கடலில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!

வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்மப்பொருளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.

இன்று காலை கடற்கரையில் மஞ்சள் நிறத்திலான மர்ம பொருள் மிதந்து கரையொதுங்கியது.

இதனை அவதானித்த பலர் பரபரப்பாகினர். இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர்.

அத்துடன் இதுகுறித்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அங்குவந்த பொலிஸார் அந்தப் பொருளை பார்வையிட்டு சென்றனர். குறித்த பொருள் சர்வதேச கடல் எல்லைகளை அடையாளமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மிதவை என்று தெரியவந்துள்ளது.

Related Posts