- Monday
- May 11th, 2026
கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்தது தமிழ் சினிமா. மொத்தம் 215 படங்கள். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இத்தனைப் படங்கள் எந்த ஆண்டும் வெளியானதில்லை. வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்களுக்கும் மேல் என்ற நிலைமை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகியுள்ள படங்களைப் பார்த்தால் தலை கிறுகிறுத்துப் போய்விடும். ஜனவரி மாதத்தின்...
தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் கவர்ந்தவர் அனுஷ்கா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி மற்றும் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார். இதில் ’ரஜினி சாருடன் நடித்தது மனதிற்கு மிகவும் சந்தோஷம், அவருடனான நட்பு எனக்கு நிறைய சொல்லி கொடுத்தது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்தது. மேலும், கௌதம்...
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2015) வவுனியா நகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது. கடந்தவருடம் இவ்விழா கிளிநொச்சியில் இடம்பெற்றதையடுத்து இம்முறை வவுனியாவில்...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் வாள்கள், மற்றும் கைக்கோடாரிகளுடன் இளைஞர் குழுவொன்று, ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடமாடியுள்ளனர். சந்தியிலுள்ள மதுபான நிலையத்துக்கு முன்பாக இந்த இளைஞர் குழு நடமாடியதையடுத்து, அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தை சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டுச் சென்றனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவ்விடத்துக்கு கோப்பாய் பொலிஸார் வந்தவேளையில்,...
யாழ் சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளால், ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டதுடன், அவரது...
உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திங்கட்கிழமை (26) தெரிவித்தார். மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா? என்று அவரிடம் வினாவியபோதே, அவரிடம் இவ்வாறு தெரிவித்தார்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷாமலி பெரேரா இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நாட்டின் திறைசேரியில் இருந்த தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேறினேன்" - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பொலநறுவையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்ட ஜனாதிபதி, தேர்தலில் தோற்றிருந்தால் தான் ஆறடி நிலத்திற்குள் புதையுண்டிருப்பார் என்றும் கூறினார். அக்கூட்டத்தில் மேலும்...
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்ந்தோருக்கும் பொதுமக்களுக்குமிடையே இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்றும் தெரியவருகிறது. சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும், அங்குவந்த பொலிஸார் கை கட்டி வேடிக்கையே பார்த்தனர் என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கேர்ணல் தரப் பட்டங்களையும் உடனடியாக இரத்துச்செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டபின் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ் இராணுவ தலைமைத்துவ பயிற்சி நடவடிக்கைகளை கல்வித் துறைகள், தொழிற் சங்கங்கள்...
இந்தியாவின் 66 ஆவது குடியரசுதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துதரகத்தில் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியாவின் யாழ்ப்பாணத்திற்கான உயர்ஸ்தானிகர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது இதில் இந்தியாவின் தேசியக்கொடியை யாழ். இந்தியத் தூதரகத்தின் தூதுவர் நடராஜா ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்தியாவின் குடியரசுதினத்தை...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 447 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் இந்த நோய்த் தாக்கத்திற்கு இவ் வருடம் 3199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் அதிகமாக பரவியுள்ளது. கொழும்பில் 870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக...
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கருத்துக்கள் தொடர்பிலான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை (25) கூறினார். வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களான, அம்பன், குடத்தனை, நாகர் கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள மணல்...
மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விரைவில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், மக்கள் மீள்குடியேறவேண்டிய பகுதிகள் மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் ஆகியோரைப் பார்வையிடுவதற்காக அவர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியிலுள்ள புகையிரதக் கடவை பாதுகாப்பாற்ற நிலையில் காணப்படுவதால் ஆபத்து மிகுந்ததாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆனந்தகுமாரசாமி பெண்கள் விடுதிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும், புகையிரதப் பாதையில் வீதிக்கடவை இல்லை. அத்துடன் புகையிரதம் வரும் வேளையில் ஒலி எழுப்பும் கம்பமும் அவ்விடத்தில் பொருத்தப்படவில்லை. யாழ். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்கள்...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் சமய முறைப்படி திருமணத்தில் இணைந்துகொண்டவர்களுக்கான சட்ட ரீதியான திருமணப்பதிவு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இராசேந்திரம் குருபரன் தலைமையில் இத்திருமணப்பதிவு நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் ஒழுங்குப்படுத்தலில் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. திருமணப் பதிவுகளுக்கு அழைக்கப்பட்ட 19 சோடிகளில் கலந்து கொண்ட 12 சோடிகளுக்கு...
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் குழந்தைகளுக்கான பால்மா உட்பட குழந்தைகளுக்கான உணவுகளின் விலைகள் குறைக்கப்படும் என்று பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இதேவேளை, எரிபொருட்களின் விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 29ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு –...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம்...
மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின்...
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட 6 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க கொழும்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கே வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுக மாகாண சிரேஷ்ட...
Loading posts...
All posts loaded
No more posts
