Ad Widget

குழந்தைகளுக்கான பால்மா விலை குறைப்பு

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் குழந்தைகளுக்கான பால்மா உட்பட குழந்தைகளுக்கான உணவுகளின் விலைகள் குறைக்கப்படும் என்று பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருட்களின் விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 29ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ குறிப்பிட்டார்.

Related Posts