Ad Widget

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு!

இந்தியாவின் 66 ஆவது குடியரசுதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துதரகத்தில் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது.

india-function-1

யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியாவின் யாழ்ப்பாணத்திற்கான உயர்ஸ்தானிகர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது இதில் இந்தியாவின் தேசியக்கொடியை யாழ். இந்தியத் தூதரகத்தின் தூதுவர் நடராஜா ஏற்றிவைத்தார்.

india-function-2

தொடர்ந்து இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்தியாவின் குடியரசுதினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியும் தூதுவரினால் வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ் இந்தியத் தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts