Ad Widget

நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு இடப்படவில்லை’

நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு மின் சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு இடவில்லை என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (24) மதியம் சுற்றுச்சூழல் அமையத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் நொர்தன் பவர் நிறுவனத்தை மூடும்படி தமக்கு எந்த அறிவித்தலும் வரவில்லை என அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா தெரிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அக் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

மின் சக்தி எரிசக்தி அமைச்சர், நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு இடவில்லை.

இலங்கை மின்சார சபை அதிகாரிகளை அழைத்து நொர்தன் பவர் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவே உத்தரவு இட்டார். எனவே, அந்நிறுவனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபை மின்சாரத்தை கொள்வனவு செய்யாது.

அதனால் அந் நிறுவனத்தின் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் தொழிற்பட மாட்டாது.

குறித்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கு நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அது தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்ற. வழக்கு விசாரணைகளின் முடிவிலையே அதுபற்றி தெரிய வரும் என தெரிவித்தனர்.

Related Posts