- Tuesday
- May 19th, 2026
பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாவுக்குப் பப்பாசிப் பழ விற்பனை இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது. இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி...
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்த இம் மாதத்துக்குள் தீர்மானிக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் கடந்த முதலாம் திகதி மூன்று பிரதான கட்சிகளுடன் எனது தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு...
முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 500 வரையான வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு பொது மக்கள் தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி தனியார் கம்பனியிடமிருந்து 500...
யாழ்.கல்லுண்டாய் வெளியில் 3 மாத காலத்துக்கு கழிவுகள் எவையும் கொட்டப்படக்கூடாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன் நேற்றைய தினம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்.கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கழிவுகள்கொட்டப் படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்...
தமிழகத்தின் மானா மதுரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மூங்கில்ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் நிரோஷா (21 வயது). இவர் மானாமதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை வேலைக்குச்...
இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2–வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விளையாடிய இந்திய அணி 92 ரன்னில் சுருண்டதால் ரசிகர்கள் ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங்...
தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஹன்சிகா. அவருக்கு மிகவும் பிடித்தமானது என்ன? மகிழ்ச்சி அளிப்பது எது என்பது குறித்து சொல்கிறார்.. திரை உலகில் காலடி வைத்த பிறகு அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்தால் ‘ஈகோ’ பார்க்காமல் நடிப்பேன். ‘அரண்மனை–2’ படத்தில் திரிஷாவுடன் நடிப்பது புதிய அனுபவம்....
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ‘புலி’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.கே.டி.பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியானது. இப்படம் வெளியான அன்று விஜய்யின் ரசிகர்களான சவுந்திர ராஜன் மற்றும்...
147 பயணிகளுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நடுவானில் பறக்கும் போது பைலட் திடீரென மரணமடைந்தார். அமெரிக்காவின் பீனிக்ஸ் - பாஸ்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தடம் எண் 550 என்ற அடையாளத்துடன் அந்த விமானம் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான பீனிக்ஸ் நகரில் இருந்து வடகிழக்கு...
ஏழாலை மயிலணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிய முற்பட்ட 5 பேர் கொண்ட கும்பலை, ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் மயிலணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கும்பலொன்று நுழைய முற்பட்டுள்ளது. எனினும், வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டு அயலவர்கள் கூடியமையால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து...
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதகுடன் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமானார். நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வடமராட்சி -பருத்தித்துறை - கற்கோவளத்தைச் சேர்ந்த எஸ்.மணிமாறன் (வயது -32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே மரணமானவராவார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர் கடமை முடிந்து...
வன்கொடுமையின் பின் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சிறுமி சேயாவை தானே கொலை செய்தார் என்று சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கொண்டயாவின் சகோதரரான ஜயலத். சேயா கொலை வழக்கு நேற்று மினுவாங்கொட நீதிமன்றில் பிரதம நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஜயலத் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்தார் என்று சி.ஐ.டியினர் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினர். சேயா கொலைக்குப் பின்னர் கொண்டயா...
மஹிந்த அரசால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டிடத்தொகுதி முதலான அபிவிருத்தித் திட்டங்களால் பல கோடி ரூபாக்கள் நட்டம் மட்டுமே ஏற்பட்டது என பாரிய கொள்கைத் திட்டங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். உலக குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு பிரதீபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட...
"எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை. இன்று உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுடன் நல்ல நட்பாக உள்ளன என்பதுடன் எம்முடன் இணைந்தும் செயற்படுகின்றன. எனவே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு இதுவே நல்ல சூழல். இதுதான் சரியான யுகம். இந்த அரசின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்கவேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனைப்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எமது மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கையில் ஆராயப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது....
இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த...
சட்டவிரோத செயல்களற்ற அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார். யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும்...
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்புக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மென்பான நிறுவனம் ஒன்றின் விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டிருந்தது. தமது நிறுவனத்தின் விளம்பரப் பதாகையானது பொருத்தப்பட்டது விசமிகளின் செயல் எனவும் அதற்கு மனவருந்துவதாகவும் குறித்த மென்பான நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட...
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
