விலகினார் ஆளுநர், நடத்தினார் சுமந்திரன் : பிரதம ஆசிரியருக்கு விளக்க கடிதம் அனுப்ப வடக்கு மாகாணசபை முடிபு

வடக்கு மாகாண சபையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வலம்புரி பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்புவது என வடக்கு மாகாண சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து நான்காவது அமர்வு நேற்றையதினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் காலை ஒன்பது...

உலகத் தலைவர்கள் வரிசையில் வடமாகாண முதலமைச்சர்; இராதாகிருஸ்ணன்

உலகத் தலைவர்கள் வரிசையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் வேலைத் திட்டத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கான தேசிய நிகழ்வு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கு முன்னர், பரந்தன் தமிழ்...
Ad Widget

பலாலி பொலிஸ் நிலையம் மீள்குடியேற்ற பகுதிக்கு விரைவில் மாற்றப்படும்

தற்போது உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் அமைந்திருக்கும் பலாலி பொலிஸ் நிலையத்தை, இந்த வருட இறுதிக்குள் மக்கள் மீள்குடியேறிய பகுதிக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.டி.எஸ்.சி நிவுன்னில்ல தெரிவித்தார். சிவில் சமூகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்தில் கிராமஅலுவலர் எஸ்.அனுரதன் தலைமையில், செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, அதில்...

சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை

அரசு எமது உரிமைகளைத் தந்தால், சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங் லியாங்கிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். சுமார்...

சோமவன்ச அமரசிங்க காலாமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலாமானார். இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது. 1969ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட சோமவன்ச அமரசிங்க, அக் கட்சியின் நான்காவது தலைவராக பதவியேற்றார். பின்னர்,...

நெடுங்கேணியில் காணாமல்போன மாணவி மீட்பு

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச்சேர்ந்த 17 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார்தெரிவித்துள்ளார். ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவி தனதுதையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாககடந்த சனிக்கழமை சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் அன்றையதினமே நெடுங்கேணி பொலிசில்...

குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு! நிஷா பிஸ்வால்

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னேற்றம்...

குற்றச்சாட்டை மறுக்கிறார் சுமந்திரன்!

அமெரிக்க காங்கிரஸில் உள்ள இலங்கை ஆர்வலர்களே தம்மை அழைத்துள்ளதாகவும் தாம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்கா செல்லவில்லை என்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தாம் அமெரிக்காவுக்கு சென்றதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. எனினும் இதில் உண்மையில்லை என்று...

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பஸ் மீது தாக்குதல்!! மூவர் படுகாயம்!!

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது நேற்றிரவு 8 மணியளவில் நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் அதில் பயணம் செய்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாழைச்சேனை டிப்போவிற்குச் சொந்தமான பஸ்வண்டியே தாளங்குடா பிரதான வீதியில்...

அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் அரச சேவைத் துறையினரின் அடிப்படைச் சம்பளம் 11,730 ரூபாவிலிருந்து 24,230 ரூபா வரை அதிகரிக்கும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை...

‘பியர் குடிக்கும் காசு’ : வடமாகாண சபை கன்சாட்சிலிருந்து நீக்கம்

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரால் சபையில் கூறப்பட்ட 'பியர் குடிக்கும் காசு' என்னும் விடயம் கன்சாட்டில் பதிவு செய்யப்படாமல் நீக்கப்பட்டது. வடமாகாண சபை நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உறுப்பினர்கள் இடையில் விவாதம் நடைபெற்றது. “முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை என்ன தேவைக்கு...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்

“இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்” என வட மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...

வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச்சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச்சட்டம் எதிர்ப்புக்களின்றி வடமாகாண சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் குழு நிலை விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டன. வாத விவாதங்களின் பின்னரும், கூச்சல் குழப்பங்களின் மத்தியிலும், நிதி நியதிச்சட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டு குழுநிலை...

மஹிந்தவின் மாளிகையை பெறுவதற்கான பிரேரணை நிறைவேற்றம்

மகிந்த ராஜபக்ஷவினால் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட மாளிகையினை பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றது. அந்த அமர்வின் போது, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த பிரேரணையினை முன்மொழிந்தார். வடக்கு மாகாண சபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடாத்துவதற்கும்,...

க்ளைபோசெட்டை விட அதிக விஷமுடைய கிருமிநாசினி சந்தையில்?

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட க்ளைபோசெட் (Glyphosate) எனும் கிருமி நாசினியை விட, அதிக விஷமுடைய பிறிதொரு விவசாய இரசாயனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதன்படி க்ளுபோசினேட் (Glufosinate) எனும் பெயரில் குறித்த கிருமி நாசினி சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இப் புதிய களை நாசினி க்ளைபோசெட்டை விட 15 மடங்கு அதிக...

உதவிய அனைவருக்கும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளர் நன்றி

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, நிதி உதவி வழங்கிய வௌிநாட்டு மற்றும் இலங்கை மக்களுக்கு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளர் வை.எம்.வில்பிரட் குமாரசிறி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக விளம்பரங்களை மேற்கொண்ட தெரண ஊடக நிறுவனத்துக்கும் அவர் விஷேடமாக நன்றி தெரிவித்துள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவைப்பட்ட பெட் ஸ்கேன் (PET...

சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை!

சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மிகவும் நேர்மையான, திறந்த வெளிநாட்டுக் கொள்கையையே பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புலைமைத்துவ கலந்துரையாடலில்...

சரணடைந்தவர்களின் விபரங்களை வழங்க அரசாங்கம் மறுப்பு!

இறுதிப் போரின்போது காணாமல் போனோரின் விபரங்களைத் தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருந்தபோதிலும், இதுவரை அவர்கள் அதனை வழங்குவதற்கு எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்த விபரங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றிருந்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஓரளவுக்கு நிறைவுபெற்றிருக்கும். ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...

VIP அட்டையை அகற்ற மறந்த வடமாகாண சபை உறுப்பினர்

ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். அதன்போது, மிக முக்கிய நபர் என்பதை அடையாளப்படும் VIP அட்டையொன்று அவருக்கு வழங்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட VIP அட்டையை தனது காரில் முன்புற கண்ணாடியில் ஒட்டினார். அதனையடுத்து, தனது குடும்பத்தினருடன சென்று ஜனாதிபதி மைத்திரிபால...

சீன தூதுவர் யாழ்.மாவட்டச் செயலாளர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் யி ஸியாங்லியாங் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனை மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடவடிக்கைகள் தொடர்பில், மாவட்டச் செயலாளரிடம் சீன தூதுவர்...
Loading posts...

All posts loaded

No more posts