சிறைச்சாலையில் பயிற்சி பெறும் தமிழ் அதிகாரிகள் மீது தாக்குதல்!!

கொழும்பு உள்ள சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் உள்ள தமிழ் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு 40 தமிழர்கள் சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள விடுதியில் புகுந்த 100க்கும் அதிகமான சிங்கள அதிகாரிகளும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பயிற்சி பெறும் சிங்கள மாணவர்களும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களில் எட்டு...

தற்கொலை அங்கி விவகாரம் ஆளுநரது உதவியாளரும் கைது!

தென்மராட்சியின் மறவன்புலோ பகுதியில் வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவத்தினில் ஆளுநர் சிறிசேன கூரேயின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான றெஜினோல்ட்குரேயின் வலதுகரமாக செயற்பட்டு வந்த முரளி என அழைக்கப்படும் சிவராசா சிவகுலன் (வயது 29) என்பவரே கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக...
Ad Widget

கைவிடப்பட்ட இராணுவ முகாமில் திடீரென வெடித்த குண்டுகள்!

மட்டக்களப்பு- மாவடிவேம்பில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இராணுவ முகாமில் நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 15 குண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவடிவேம்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து...

வடக்கின் கல்வி நிலை போர் முடிந்த பின் வீழ்ச்சி! முதலமைச்சர் வேதனை

போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கல்வி நிலை வீழ்ச்சியடைவதானது...

பெண் போராளிகளின் தடுப்புமுகாம் வாழ்வு பற்றிய நூல் வெளியீடு

முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. போரில் விழுப்புண் அடைந்து ஒரு கண்ணையும், ஒரு கரத்தையும் இழந்த பெண் போராளியான...

அமெரிக்காவின் பூகோள அரசியல் நலன்களின் மீதே சமந்தா பவர் அக்கறை: விக்னேஸ்வரன் செவ்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்த ஐ.நாவிற்கான அமெரிக்காவின் தூதுவர்...

58 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

பிரான்பற்றுப் பகுதியிருந்து சுழிபுரம் பகுதிக்கு 58 லீற்றர் கசிப்பை கொண்டு சென்ற சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை (14) மாலை கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் பகுதியில் பொதிகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் மறித்துச் சோதனை செய்துள்ளனர். இதன்போது, 78 போத்தல்களில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கசிப்பு மீட்கபட்டது. கைது செய்யப்பட்ட...

வழக்கை முழுமையாக விசாரித்த பின்னரே டி.என்.ஏ அறிக்கை தொடர்பில் கூற முடியும்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அது பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே, மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் நேற்று புதன்கிழமை (15) தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கடந்த மே...

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மிகக்குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாயை நிர்ணயிக்குமாறும் ஏனைய கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், ஜூலை மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு முதல், பஸ் சேவையை இடைநிறுத்தி சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த...

ஜெனிவாவை மிக இலகுவாக எதிர்கொள்வோம்! அரசு நம்பிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை மிக இலகுவாக எதிர்கொள்வோம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். "சர்வதேச நாடுகள் இலங்கை அரசு மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளன. அதனால், இம்முறையும் போதுமான கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கும்" என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்....

அலவி மௌலானா காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அல்ஹாஜ் அலவி மௌலானா நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் காலமானார். சுதந்திரக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா ஸ்ரீமாவோ தலைமையிலான அரசில் ஜனவசம நிறுவனத் தலைவராகச் செயற்பட்டிருந்தார். அதன் பின்னர் சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தராகவும், கொழும்பு மாநகர...

சாலாவ முகாம் மீண்டும் புனரமைக்கப்படும்!

முற்றாக அழிவடைந்த நிலையிலுள்ள கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் மீண்டும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும்...

வித்யா கொலை வழக்கு உண்மை தெரிந்த பொது மக்கள் சாட்சியமளிக்கலாம்

வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் உண்மைகளை அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் என ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனை நேற்றய தினம் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக நீதிவான் குறிப்பிட்டிருப்பதாவது, இத்தகைய பாரதுரமான...

மாகாண சபையில் பெண்களுக்கு 25 சத இட ஒதுக்கீட்டுக்கான சட்டதிருத்தம்

இலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், குறைந்தபட்சம் 25...

சுவிஸர்லாந்து தூதுவர், வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு!

சுவிஸர்லாந்து நாட்டின் ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் 11 மணியளவில் வடக்கு முதலமைச்சரின் கைதடியிலுள்ள அமைச்சில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது, தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோனுடன் சுவிஸர்லாந்து நாட்டுப் பேராசிரியர் ரட்லரும் கலந்துகொண்டிருந்தார். இந்தச்...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணியில் விரைவில் மீள்குடியேற்றம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக காணியை அரசுடைமையாக மாற்றி அங்கு 400 குடும்பங்களை உடனடியாக மீள்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதோடு, இவர்களில் 11 ஆயிரம் குடும்பங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவுகளை...

வித்யா கொலை சந்தேகநபர்கள் 12 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும்...

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார். சிறுமியின் உறவுக்காரரான மேற்படி இளைஞடன் சிறுமிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, இருவரும் பாலியல் ரீதியிலான உறவு வைத்துள்ளனர். இதனால் குறித்த...

மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை

வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி, ஊரணி, காங்கேசன்துறை, பலாலி, தையிட்டி ஆகிய பகுதிகளில் தற்போது மக்கள் மீள்குடியேற்ற வேண்டும் என்று வலியுருத்தி இன்று யாழ் வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இவ்வழிபாடு வலிவடக்கு பிரதேச மீள்குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் தழிழ் தேசிய...

தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள்

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் கினித்தேன பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்பாக தலைகீழாக நின்று 14.06.2016 அன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே மேற்படி...
Loading posts...

All posts loaded

No more posts