வெளிநாடுகளுக்கு செல்வோர், அவதானமாக செயற்பட அறிவுறுத்தல்

வெளிநாடுகளுக்கு பணிகளுக்காக செல்பவர்கள் வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயம் ஊடாக தகவல்களைப் பெற்று செல்வதே சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள விடுத்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் ஊடாக சரியான தகவல்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொழில் மோசடி வர்த்தகர்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு...

வலி.வடக்கில் பல இந்து ஆலயங்கள் இடித்தழிப்பு!!

வலி.வடக்கில் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னர் இருந்த பல இந்து ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்திருந்த பகுதிகளில் சனிக்கிழமை 201 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள குடியமர அனுமதித்தனர். அதனை அடுத்து அப்பகுதிகளை...
Ad Widget

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறார் சரத்பொன்சேகா!

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமையன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெறவுள்ளார். இந்நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவை, சரவணபவனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கெதிராக யாழ். நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கைத் திறந்துவைக்க சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பயணம் செய்திருந்தார். இத்திறப்பு விழாவுக்குவந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவபணபவன் தனது மகளின்...

போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலகப் பங்களிப்புத் தேவை

பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான மற்றும் நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலக விசாரணை அவசியம் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் முழுமையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா...

தனியார் பஸ் சேவை வழமைக்குத் திரும்பியது

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பால் நேற்று திங்கட்கிழமை (27) தடைப்பட்ட தனியார் பஸ் சேவை இன்று செவ்வாய்க்கிழமை (28) வழமைக்குத் திரும்பியுள்ளது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகள், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கிடையில், நேற்று (27) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில், இணைந்த நேர அட்டவணை...

மீள்குடியேறுவதற்கு இடமில்லாதவர்களுக்கு காங்கேசன்துறையில் காணி

யாழ்ப்பாணத்தில், மீள்குடியேறுவதற்கான காணி இல்லாத மக்களுக்கு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்தப் பகுதியில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இதற்காக, 140 ஏக்கர் காணியைப் பெறுவதற்குரிய அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் கோரினார். அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்ற பின்னர், காணியில்லாத குடும்பங்களுக்கு...

ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கை, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக சென்றுகொண்டிருந்த போது, வவுனியா-செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதிலில், தன்னுடைய வாகனத்தை 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று மோதியமையால், பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த...

யாழில் இபோச பஸ் மீது தாக்குதல்

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கான சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 இற்கு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் வரணி கொடிகாமத்தினைச் சேர்ந்த கதிர்காம குமார் குலசிங்கம் (55) யாழ்.போதனா வைத்தியசாலையில்...

அரியநேத்திரனிடம் குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நேற்று குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வுத் தலைமயகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், 10 வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற அரசியல் படுகொலை சம்பவமொன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து...

என் மீது தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவிய தமிழர்களை மன்னிக்க முடியாது

தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க தன்னால் முடியாதென்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில், கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த உதவியதாக நான்கு தமிழ் கைதிகளுக்கு எதிராக தாக்கல்...

36 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையக அலுவலகத்தின் தலைமையில், இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது. குறித்த குழுவில் 16 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் 4799 அகதிகள்...

முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்த இலங்கை முடிவு

பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ் வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL 553/554) ஒக்டோபர் 30ம்...

வலிகாமம் வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடைபவனி

வலிகாமம் வடக்கு பகுதிகளிலுள்ள தங்களுடைய காணிகளை விடுவிக்க கோரி, மக்கள் இன்று நடைபவனியொன்றை மேற்கொண்டுள்ளனர். மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் நல்லூர் ஆலய முன்றலில் கூடி, அங்கிருந்து யாழ். நகரிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை நடைபவனியை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் நல்லூர் ஆலயத்தில் கூடிய...

வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால...

ஆரம்பித்தது முதல்வரிற்கு எதிரான போராட்டம்! கூட்டமைப்பின் எம்.பி சிவமோகனும் இணைவு!!!

வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தை மேலும் சிக்கல்படுத்தும் விதமாக வவுனியாவில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, சிறிரெலோ கட்சிகளின் பிரமுகர்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி சிவமோகனும் கலந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும், ஓமந்தையில் அமைக்க முயலும் முதல்வரை எதிர்க்கிறோம் என இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

யாழில் மாணவன் இறந்த விபத்து முன் திட்டமிடப்பட்டதா ? அதிர்ச்சியளிக்கும் சி.சி.ரி.வி வீடியோ !

காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (23) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்த நிலையில் அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பட்டா டிமோ சாரதிஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள சி.சி.ரி.வி கமராப் பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறித்த...

யாழில் 100 கிலோ கஞ்சா கடத்தல் முறியடிப்பு ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கடத்தி செல்லுவதற்காக கொண்டு வரப்பட்ட 100கிலோ கேரள கஞ்சா விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரிய கடத்தல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட வளலாய் - அக்கரை கடற்பகுதியில் வைத்தே இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்...

முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை!

ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்....

யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் வீசவில்லை!– கோத்தபாய ராஜபக்ஷ!

தான் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த வேளையில் சிறீலங்காப் படையினரால் கொத்துக்குண்டுகள் வீசப்படவில்லையென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய வேளை அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனது காலத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். வெளியிடப்பட்ட ஒளிப்படங்களை...
Loading posts...

All posts loaded

No more posts